மனம்தளராத தாய் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
லிண்டா பானண் என்பவர் பிறக்கும்போதே கைகளின்றி பிறந்தவர் இளம்வயதிலேயே இந்தக் குறையைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் பல்வேறு திறமைகளைத் தனக்குள்ளேயே வளர்த்துக்கொண்டார் காலால் எழுதுவது, கிட்டார் வாசிப்பது, நீச்சல் அடிப்பது போன்ற பல்வேறு விடயங்களில் ஆர்வமுடன் ஈடுபட்டார். அவருக்குத் திருமணமும் முடிந்து, ஒரு மகன் பிறந்தான். அவனும் கைகளின்றியே பிறந்தான். மனம் தளரவில்லை அந்தத் தாய்.
குழந்தைக்குரிய அனைத்துத் தேவைகளையும் அவரே கவனித்து கொண்டார். எவருடைய உதவியையும் அவர் நாடவில்லை. தக் மகனுக்குச் சட்டை போடுவது, உணவூட்டுவது, பள்ளிக்கு அழைத்து செல்வது ஆகிய, எல்லாவற்றையும் தானே கவனித்துக்கொண்டு, அதிர் மகிழ்ச்சி கண்டார்.
ஒருமுறை ஒரு பத்திரிகையாளர் அவரிடம் கேட்டார், "கைகள் இல்லாத நீங்கள் உங்கள் மகனுக்காக இவ்வளவு வேலைகளையும் செய்வது சிரமமாக இல்லையா" என்று. லிண்டா சொன்னார், "என் குழந்தைக்கு இதையெல்லாம் செய்ய முடிந்ததை எண்ணி எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது, இதில் கிட்டும் திருப்தி வேறு எதிலும் இல்லை என்று.
ஆம். தாயன்பைத் தாண்டிய அன்பு என்று எதுவும் இல்லை. அதன் வழியாகத்தான் இறையன்பையும் ருசிக்க முடிகிறது.
நான் எத்தனை முறை கீழே விழுந்தாலும் என்னைத் தூக்கி விட
ஓடோடி வருபவள் நீ மட்டும் தானே அம்மா!
"நான் எனது தாயின் பிரார்த்தனைகளை நினைவு கூறுகின்றேன். அவை எப்பொழுதும் என்னைப் பின் தொடர்கின்றன. அவை வாழ்நாள் முழுவதும் என்னைப் பாதுகாப்பு அரணாகப் பற்றி கொண்டுள்ளன." -ஆபிரகாம் லிங்கன்