என் கவனம்: நிலையான கடவுள் மீதா? நிலையற்றவைகள் மீதா? | மாணிக்கம் | Sunday Reflection


ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு
I: ஆமோஸ் 8: 4-7 1

II:திமொத் 2: 1-8

III:லூக் 16: 1-13

நிகழ்வு: 
திருஅவை வரலாற்றில் எண்ணற்ற புனிதர்களின் வாழ்க்கையை குறித்து நாம் வாசிக்கின்றோம். தியானிக்கின்றோம். எப்படி இப்படியெல்லாம் இவர்களால் வாழ முடிந்ததது என்று யோசிக்கின்றோம். அவர்களின் வாழ்விலிருந்து நம் வாழ்விற்கு தேவையான பாடங்களையும் கற்றுக்கொள்கின்றோம். ஏறக்குறைய 12ஆம் மற்றும் 13ஆம் நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் இவர். தன் முழுமையான அர்ப்பணத்தால் ஆண்டவர் இயேசுவின் அன்புச்சீடராய் தன் வாழ்வை அமைத்தவர். காலங்கள் மாறினாலும்இ கோலங்கள் மாறினாலும் தன் எண்ணத்திலும்இ இயேசுவின் ஏழ்மையை அணிந்து கொள்வதில் இருந்த ஆர்வமும் சற்றும் மாறவில்லை. பணக்கார குடும்பத்தில் பிறந்த போதும்இ மிகப்பெரிய துணி வியாபாரியின் மகனாய் பிறந்திருந்தும் அனைத்தையும் களைந்துவிட்டுஇ ஆண்டவனை பற்றி கொள்ள நினைத்த எண்ணம் சற்று வித்தியாசமானது என்பதைவிட கடவுளின் அழைப்பாகவே பார்க்கப்படுகிறது. குழந்தைப் பருவம் முதல் கடவுளின் திட்டப்படி வளர்க்க முயன்ற இவரின் தாய் ஒருபுறம். தன் வணிக வியாபார பின்னணியில் மிகச்சிறந்த திறன்மிகுந்த முதலாளியாய் இவன் உயர வேண்டுமென்பது தந்தையின் கனவு. இது மறுபுறம். ஆனால் இவ்விரு புறங்களையும் தேர்ந்தெடுக்காமல் இன்னொரு புறமாய் தன் வாழ்வை அமைத்திட்டார் என்பதுதான் இவரின் வாழ்வில் காணப்படும் சுவாரஸ்சியம். ஆடம்பர வாழ்வை விடுத்து ஆண்டவர் தனக்கென கொடுத்த ஏழ்மை வாழ்வை அணிந்து கொள்ள தான் அணிந்திருந்த ஆடைகளையே களைந்த கள்ளமில்லா ஏழ்மையின் காதலன்தான் இப்புனிதர். ஆன்மிகத்தில் இன்னும் ஆழப்பட இறைவனின் குரலை சிதிலடைந்த ஆலயத்தில் கேட்டு, சீரான வழிகளை மேற்கொண்டுஇ சிந்தனை தெளிவுடன், சிலுவையில் தொங்கிய இயேசுவுக்காய் சிலுவையைத் தன் கையில் ஏற்க திருவுளமானார் இப்புனிதர். கடைசி வரை கடவுளின் துணையை மட்டுமே நம்பிய இவர் என்றும் ஏழ்மையை ஏற்றுக்கொண்டவராகவும்இ நிலையான மகிழ்ச்சிஇ அமைதிஇ ஆதரவுஇ உடனிருப்பு கடவுளிடமிருந்தே நமக்கு கிடைக்கின்றன என்பதை தன் வாழ்வு மூலமான நமக்கு கற்றுத்தருகிறார் இப்புனிதர். அவரின் பெயர்தான் ‘அமைதிக்கான செபத்தை’ வடித்த புனித பிரான்சிஸ் அசிசியார். தன் வாழ்வின் அனைத்து தளங்களிலும் எதுவும் நிலையானதல்ல. ஆண்டவர் இயேசுவின் உடனிருப்பும்இ அவரின் பாதுகாவலும்இ அவரின் பராமரிப்பும் மட்டுமே எல்லா நிலைகளிலும் நிலையானது. நிரந்தமானது என்பதை உணர செய்து வாழ்வை அமைத்திட வழிகாட்டுகிறது புனித அசிசியாரின் வாழ்வு. இத்தகு வாழ்வுதனையே வாழ்வாக்கவே அழைப்பு கொடுக்கிறது ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு.

இறைஇயேசுவில் பிரியமுள்ள சகோதரஇ சகோதரிகளே!
    மனித வாழ்வை இவ்வுலகில் தென்படும் துறைகள் அனைத்தும் அதனதன் தன்மைக்கும் ஒழுங்குக்கும் படிப்பினைகளுக்கும் ஏற்றவாறு கூறுபோடுகின்றனர். மருத்துவ உலகம் அதன் வேலையை நடத்துகிறது. உளவியல் உலகம் உள்ளே ஊடுருவி செல்கிறது. நீதித்துறை நிதியில் கனிந்து நிதமும் பயணிக்கிறது. வர்த்தக உலகம் வாய்க்கரிசி போட காத்து கொண்டிருக்கிறது. சினிமாத் துறை சிறார் தொடங்கி பெரியோர் வரை அனைவரின் வாழ்விலும் வாசல்தேடி வந்து வாழ்வைச் சீரழிக்கிறது. இவ்வாறு அவ்வப்போது தங்களின் இருப்புநிலையால் இருக்கின்ற மக்களை கெடுத்து குட்டிச்சுவராய் மாற்றுகிறது இவ்வுலகில் பெரிதும் மதிக்கும் நிலையற்ற பணம் பெயர், புகழ், பட்டம், செல்வம், ஆணவம், ஆள்பலம், பணபலம் திறமைகள் மற்றும் பல. இவையனைத்தும் ஒருவருக்கு நிலையான வாழ்வை தர முடியாது என்பதே இன்றைய நாள் வாசகங்களின் வழியாக கடவுள் தரும் அருமையான பாடம். முதல் வாசகமும்இ இரண்டாம் வாசகமும் இரண்டு விதமான கேள்விகளுக்கு விடையளிக்கின்றன:
1.    கடவுளின் திட்டத்திற்கு முன் என் திட்டம் ஒன்றுமில்லாமல் போகிறதா?
2.    உள்ளத்தில் உருவாகாத மாற்றத்தால் ஏதாவது பயன் உண்டா?
இந்த இரண்டு கேள்விகள்தான் என்னை நற்செய்தி நோக்கி நகர்த்தி நலமான புரிதல்களைப் பெற வைக்கிறது. எப்போதெல்லாம் நாம் கடவுளின் திட்டத்திற்கு நம்மை கையளிக்கிறோமோ அப்போதெல்லாம் இறைவன் நமக்கான பாதையை ஏழைஇ எளிய மக்களின் வழியாக பயணித்து வானகத்தந்தையின் வாழ்த்தொலியைப் பெற வைக்கிறார். அதாவது கனிவுநிறைந்த உள்ளத்தினராக நம்மை உருவாக்க கடவுள் விரும்புகிறார். காரணம் கனிவுநிறைந்த வாழ்வு நம் கண்களைக் கடவுளை நோக்கி திருப்ப செய்யும். நம் உள்ளத்திற்குள்ளே ஒரு அகப்பயணத்தை உருவாக்கும். அத்தகைய பயணம் தரும் மிகப்பெரிய படிப்;பினை என்னவெனில்இ நம் வாழ்வு ‘நிலையற்றது’ என்ற சிந்தனைதான். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கடவுள் நினைத்துவிட்டால் நாம் ஒன்றுமில்லாமல் போய்விடுவோம். கடவுளுக்கு முன்பாக நான் எளியவன்இ கடவுளின் படைப்பில் சிறியவன் என்று டைலாக்கெல்லாம் அடிக்காமல், உருப்படியான வேலை செய்து வாழ்ந்திட இன்றைய நாளில் அழைக்கிறார் இறைமகன் இயேசு. 
முதல் வாசகத்தில், நீதியின் இறைவாக்கினரான ஆமோஸின் வழியாக இறைவன் நிலையானவற்றை தேடாமல் வாழ்வை அமைத்திட நிலையான அவரைப் பற்றி பிடிக்க ஒரு வழிதனை காட்டுகிறார் கடவுள். அதுதான் ஏழ்மையோடு எளியவராய் வாழும் மக்களிடத்தில் காட்டப்பட வேண்டிய கரிசனை. ஏழைஇ எளியோரை மதியாமல், அவருக்கு உரியவற்றை தட்டிப் பறித்தால் அதற்கான கைம்மாறு நமக்கு கிடைக்கும் என்பதை தெளிவாய் எடுத்துரைக்கிறது ஆமோஸ் நூல். நிலையற்ற தன்மையில் விளங்கும் அதிகாரம்இ பண திமிர்இ பதவி மோகம், பகட்டு வாழ்க்கை இவையெல்லாம் நீங்கள் செய்யும் தீய செயல்கள் என்று அறிக்கையிட்டு கூறும் ஆமோஸ் ஆண்டவரைப் பற்றிக் கொள்ளுதலே என்றும் மாறாத அவரின் பேரின்பை சுவைப்பதற்கான வழி என்கிறார். அதுவே நிலையான அவரிடத்தில் தஞ்சம் புக செய்யும் என்ற பார்வையையும் வழங்குகிறார். 
இரண்டாம் வாசகத்தில்இ 
    புனித பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகமான இன்றைய  இரண்டாம் வாசகம் எதனால் நிலையற்ற வாழ்விலிருந்து ஒரு மனிதன் நிலையான வாழ்வை நோக்கிப் பயணிக்க முடியும் என்பதை தெளிவாய் சொல்கிறது. மன்றாடுவதுஇ செபிப்பது, பரிந்து பேசுவதுஇ நன்றி செலுத்துவது இவையனைத்துமே நிலையான கடவுளைத் தேடும் வழிகள். சுற்று ஆழமாய் யோசித்தால்இ மன்றாட்டுஇ செபம், நன்றி இம்மூன்றுமே கடவுளே என் நிரந்தரம் என்று சொல்பவர்களால் மட்டுமே நடிக்காமல் நிதானமாய் நியாயமாய் வெளிப்படுத்த முடியும். இன்றெல்லாம் ஆன்மிகத்தை அன்றாட காட்சிகளாய்இ தினமும் திரையிடும் சினிமா காட்சிகளாய் மாற்றிவிட்டனர் என்பது உண்மையே. தன் சுய இலாபத்திற்காய் உழைக்காமல் கடவுளுக்காய் பணியாற்றும்போது ஒரு போதும் நிலையற்றவற்றில் நம் கவனத்தை வைக்கமாட்டோம். என்றுமே மாறாத நிலையான தெய்வத்தின் மீதே நம் கவனம் இருக்கும். அதைத்தான் புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு சொல்கிறார்: “கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டீர்கள். அவரோடு இணைந்து வாழுங்கள். அவரில் வேரூன்றியவர்களாகவும் அவர்மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள். நன்றி மிக்கவர்களாய் திகழுங்கள்” (கொலோ 2: 6-7). எனவே நாம் நம்முடைய நிலையான தளம் கடவுள் என்று நம்பும் போது இரண்டாம் வாசகத்தில் வாசிப்பது போது தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்ய நமக்கு மனசு வருகிறது. 
நற்செய்தியில், 
    இறைமகன் இயேசு இத்தகைய நிலையானவரின் மீதான கவனத்தையும், நிலையற்றவைகளின் மீதான தொடர் தேடலையும் வழங்குகிறார். அதற்கு சிறந்த உதாரணமாக, பொறுப்பற்ற கண்காணிப்பாளரின் வாழ்வையும் படம் பிடித்து காட்டுகிறார். மேலோட்டமாக பார்த்தால் இயேசு அவனின் செயலைப் பாராட்டுவது போன்று தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. அவனின் முன்மதியை மட்டுமே வாழ்த்துகிறார். அவனின் மதிப்பற்ற செயலை இயேசு பெருமையாக பேசவில்லை. நிலையான கடவுளை அடைய நாம் நிலையற்றவைகளை நாட வேண்டுமே ஒழிய நிலையற்றவைகளே நிலையானது என நினைக்கும் எண்ணம்தான் தவறானது என மொழிகிறார் இயேசு. அதைத்தான் வீட்டுப் பொறுப்பாளர் செய்கிறான். தான் செய்த தவற்றிற்கு பிறரையும் தண்டனைக்குள்ளாக்கும்இ தன்னுடைய  கள்ளத்தனத்தில் பிறரையும் இணைத்துகொள்ளும் பண்பு நிச்சயம் நிலையான கடவுளை நோக்கி நம் கால்களை நகர்த்தி செல்லாது. எவ்வளவுதான் நாம் ஆன்மிகவாதியாய் வெளியில் வலம் வந்தாலும் என் கால்கள் கடவுளின் திருச்சந்நிதியில் படாது. படுவதற்கான சூழலும் அமையாது. இதைத்தான் இயேசு இன்று மிகத்தெளிவாக சிறு காரியங்கள் செய்தாலும் அது உன்னைப் படைத்த கடவுளை அணுகுவதற்கான அடையாளமாய் இருக்கட்டும் என்கிறார். அதுதான் மிகச் சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவராய் இருக்கும் பண்பு. அவர்களால் மட்டுமே பெரியவற்றில் நம்ப தகுந்த நிலையில் செயலாற்ற முடியும். இத்தகு நிலைதான் நிலையான இயேசுவை தன் பணியால்இ வாழ்வால்இ எண்ணத்தால்இ ஏக்கத்தால்இ வார்த்தையால் என்றும் உரிமையாக்கிக் கொள்ளும் செயல். 
    எனவே நாம் நம்முடைய அன்றாட வாழ்வை அலசி ஆராய்கின்ற பொழுதுஇ எவ்வாறு நான் கடவுளை என் நிலையான செல்வமாய் புனித பவுலைப் போன்று உணர முடியும். நற்செய்தியில் காணப்படும் இவ்வுலக செல்வத்தின் மீதான அவனின் கவனம் அழிவைக் காண செய்தது. ஆனால் வைக்க வேண்டிய கவனமோ என்றும் மாறாத கடவுள் மீதானது. அதற்கு நாம் மூன்று வழிகளைப் பின்பற்ற வேண்டும். 
அரவணைக்கும் பண்புடையவராய் வாழ்தல்:
    ஆமோஸ் இறைவாக்கினரின் கூற்றுப்படி நாம் ஒவ்வொருவருமே ஏழைஇ எளிய மக்களை அடக்கி ஆளாமல்இ அரவணைத்து அன்பு செய்யும் போது நாம் நிலையான கடவுளை உரிமையாக்கிக் கொள்கிறோம் என்பது தெளிவு. நீமொ 19:17இல்இ “ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார்” என்று வாசிக்கின்றோம். ஆக ஏழைகளை அன்புச்செய்துஇ அரவணைக்கும் போது நாம் ஆண்டவரையே அன்புச்செய்கிறோம். அவரையே அரவணைக்கிறோம். இத்தகு சிந்தனைதான் நிலையான கடவுள் மீதான பாசம். இத்தகு சிந்தனையை புனித யாக்கோபு தன் திருமுகத்தில் இன்னும் கூர்மைப்படுத்துகிறார்: “தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும்இ மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில்இ துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்” (யாக் 1:27) என்று உரைத்து நம் அன்பான உடனிருப்பு ஏழையோரின் ஏற்றத்திற்காய் இருந்தால் நம் கவனம் நிலையான கடவுள்மீது இருக்கிறது என்று வழிகாட்டுகிறார்.
இறைவேண்டல் செய்யும் பழக்கம் உள்ளவராய் இருத்தல்:
    இறைவேண்டல் என்றவுடனே வாய்க்கு வந்தது எல்லாம் சொல்கிற பண்பு கிடையாது. வழக்கமாய் சொல்லுவதை ஒப்பித்துவிட்டுஇ ஓரமாய் ஓடிவிடுவதும் கிடையாது. அன்றாட வாழ்வில் ஆன்மிகவாதி போல் தன்னைக் காண்பிப்பவரும் கிடையாது. அப்புறம் வேறு எதுதான் இறைவேண்டல்? கடவுள் நிலையான தன்னை நிரந்தரமாய் பற்றிக்கொள்ள இறைவேண்டல் என்ற அருமையான கருவியை நமக்கு கொடுத்திருக்கிறார். ஆனால் நாமோ அதை தவறாக பயன்படுத்திஇ ஆதாயம்தேடும் மனிதர்களாய் மாறிவிட்டோம். எனவேதான் என் வேண்டுதல்கள் கூட நிலையான கடவுளை நோக்கி போகாதவண்;;;;;;;;;;;;;;;;;;;;;;;ணம் அமைந்துவிடுகின்றது. எவ்வாறு புரிந்து கொள்வது? பவுல் குறித்து காட்டும் இறைவேண்டல் மூன்று தளங்களை உள்ளடக்கியது. ஒன்றுஇ சுயநலமில்லாத செபம். இரண்டுஇ பெருமை தேடாத செபம். மூன்றுஇ சரியான தேவைகளை முன்னிறுத்தி செய்யும் உண்மையான செபம். இவை மூன்றும்தான் நிலையான கடவுளை நாம் கண்டறிய வழி செய்கிறது. சுயநலமுள்ள செபம் கடவுளைக் காண கூட காசு கேட்க வைக்கும். பெருமை தேடும் செபம் பொறாமையைத் தூண்டிவிட்டு கடவுளைத் தேடுவோரின் பொறுமையை இழக்க செய்யும். சரியான தேவையின்றி முன்னெடுக்கும் செபமானது உண்மையின்றிஇ உறுதியான மனமின்றி கடமைக்கு செய்யும் செபமாய் மாறிடும். இவைகளை உள்ளத்தில் இருத்தி சிந்தித்தாலே போதும் நாம் செய்யும் இறைவேண்டல் இணையற்ற பலனை நமக்கு கொடுக்கும். இதை இறைவாக்கினர் எரேமியா இவ்வாறு நமக்குப் பயிற்றுவிக்கிறார்: “என்னிடம் மன்றாடு; உனக்கு நான் செவிசாய்ப்பேன்; நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கி கூறுவேன்” (எரே 33:3).
கடவுளே எனக்கு எல்லாம் என்று உணருதல்:
    வீட்டுப்பொறுப்பாளராய் திகழ்ந்தவனுக்கு அடுத்தவரின் வழியாய் கிடைக்கும் நலனே அடிப்படையாய் அமைந்தது. ஆனால் நமக்கோ கடவுளே நம் வாழ்வின் மையம் என்ற சிந்தனை வேண்டும். “உனக்கு தெரியாதா? நீ கேட்டததில்லையா? ஆண்டவரே என்றுமுள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது” (எசா 40:28) என்று கடவுளின் மாபெரும் உடனிருப்பை எசாயா இறைவாக்கினர் உறுதிச் செய்கிறார். என்ன செய்தாலும்இ எவற்றை நாடினாலும் நம் முழுமையான பார்வை கடவுள் மட்டுமே என்ற உறுதித்தன்மை நமக்கு வேண்டுமென முழங்குகிறார். 
    இத்தகு சிந்தனைகளை நம் வாழ்வின் பாதைகளாய் அமைத்து பயணம் தொடர்வோம். நிலையான சொந்தமான இயேசுவை நெருங்கி செல்லும்இ அப்போது நிலையற்றவைகள் அனைத்தும் நம்மைவிட்டு அகலும். அக்கணம் நீடித்த நிலைத்த உறவாய் ஆண்டவர் மட்டுமே இருப்பார். அத்தகைய ஆறுதலில் ஏழைகள் நம் நண்பர்களாய் மாறுவர். அவர்களுக்கான நம் செபம் கைகளை உயர்த்திச் செபிக்கும் உண்மை செபமாய் மாறும். 
“கடவுளை அணுகிச் செல்லுங்கள்; அவரும் உங்களை அணுகி வருவார்” (யாக் 4:8)

 

அருள்பணி.அ.மாணிக்கம்
பங்குத் தந்தை,
பாலக்குறிச்சி
திருச்சி மறைமாவட்டம் 

 

Add new comment

1 + 1 =