வாழ்க்கை பாதையை படித்தவர் | Navin Khulia


நவின் குலியா தன்னுடைய பள்ளி பருவத்தில் சராசரி மாணவர்களுக்கு கீழாகத்தான் மதிப்பிடப்பட்டார். அவர் உடலளவில் பலவீனமாக உணர்ந்ததால் எந்த விளையாட்டிலும் பங்கேற்கவில்லை. தன்னுடைய வகுப்புத் தோழர்களின் கேலியும், அவருடைய சகோதரரின் சாகசங்களும் இவரை உந்தித் தள்ளியது. முயற்சி செய்தார், பள்ளிப் படிக்கும்போதே சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் என்ற பெயரைப் பெற்றார். 

அவருடைய பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பூனேயில் இராணுவத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டேராடுனிலுள்ள இராணுவ பயிற்சியகத்தில் நான்கு ஆண்டுகள் பயிற்சிபெற்று “அணிவகுப்பு வெளியே (Pயளளiபெ ழரவ Pயசயனந)” என்ற நிலையை 29 ஏப்ரல் 1995 இல் அடைந்தார். கடைசியாக அவர் தடை பயிற்சி முடிக்கவேண்டும். அதற்காக எட்டு அடி பள்ளத்தைக் கடந்தபின்பு, அவர் உயர் வளைவு ஒன்றில் நின்றுகொண்டிருந்தார். அவரோடு இருந்தவர் ஒருவர் அவரைத் தவறுதலாக தள்ளிவிட, அவர் கீழே விழுந்தார். அதில் அவருடைய முதுகெலும்பு பாதிப்புக்குள்ளானது. 

இரண்டு ஆண்டுகள் மருத்துவமனையில் செலவிட்டார். இவர் இதிலிருந்து தப்பித்தாலும், இவரால் நடமாடமுடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். இருந்தபோதிலும் அவரை மேலிருந்து தள்ளிவிட்ட அவருடைய வகுப்புத் தோழருக்கு எதிராக எந்த வெறுப்புணர்வும் கொள்ளவில்லை. காரணம் அவர் வாழ்நாள் முழுவதும் முடக்கபடுவார் என்று அவருடைய தோழருக்கே அப்போது தெரிந்திருக்காது. 
இந்த காலங்களில் இப்படி நிகழ்வுகளிலிருந்து தப்பித்து, வாழ்ந்து காட்டியவர்களின் வாழ்க்கைப் பாதையைப் படிக்க ஆரம்பித்தார். தன் வாழ்க்கை நற்காலியிலேயே முடங்கிவிடக்கூடாது என முடிவுசெய்தார். கம்யூட்டர் அறிவியலில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். யுஜிசி நெட் தேர்வு எழுதினார். கணினி ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். 

அவர் மேலிருந்து கீழே விழுந்தபோது, அவர் ஏறக்குறைய ஒரு இராணுவ அதிகாரியாக உயரும் தருணம். எனவே அவர் அரசுடன் போராடி அவருக்கு இராணுவ அதிகாரி நிலையும் அதற்கான ஓய்வூதியத்தையும் பெற்றார். 
தன்னுடைய வாழ்க்கை ஒரு ஆசிரியராக முடங்கிவிடக்கூடாது என்று நினைத்த அவர், கார் ஓட்டும் பயிற்சியும், அதற்கான உரிமமும் பெற்றார். மாருதி 800 கார் ஒன்றினை வாங்கி, அதை தனக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொண்டார். பின்னர் கார்டுங் லாவிற்கு கார் ஓட்டிச்சென்றார். அதன்பின்னர் தான் அவருக்குத் தெரிந்தது அதுவரை மார்சிமிக் லாதான் உலகில் மோட்டார் வாகனம் செல்லக்கூடிய உயரமான இடமாக கருதப்பட்டது என்று. இவருடைய இந்த பயணத்தினால் கார்டுங் லாதான் உலகில் மோட்டர் வாகனம் செல்லக்கூடிய உயரமான இடமாக மாறியது. 

ஒரு மனிதனின் விடாமுயற்சியும், நிலையான மனவலிமையும் உலகிற்கே எதாவது வகையில் புதிய பாதையைக் கற்றுக்கொடுக்கும் நிலைக்கு உயர்த்தும் என்பதற்கு இவர் ஒரு பாடம்.

வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள்தான். தோற்றுக்கொண்டே வாழ்ந்த இவர்கள்தான் சாதனையாளர்களாகவும் வரலாறுகளாகவும் மாறியிருக்கிறார்கள், மாறுகிறார்கள். தடைகளைத் தகர்தெரிந்தார்கள், வாய்ப்புகள் தவறும்போதும், மறுக்கப்படும்போதும் அவர்கள் வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அவர்களே வாய்ப்புகளாக மாறினார்கள்.
 

Add new comment

3 + 4 =