இதற்குமேல் வாழ்வு உண்டா!!!

கொரோனா வைரஸின் தாக்கம் பல குடும்பங்களைப் பாதித்திருக்கின்றது. பல குடும்பங்களைச் சிதைவுக்குள் கொண்டுபோய் சேர்த்திருக்கின்றது என்று கேள்விப்படுகிறோம். பலரும் பகிர்ந்துகொள்கிறார்கள். என் குடும்பத்தில் இப்படி சண்டைகள் வந்ததில்லை. இதுவரை இப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்ததில்லை, இப்பொழுது அதிகமாக இருக்கின்றது. குழந்தைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களின் சில விசயங்கள் ஆச்சரியத்தைத் தருகின்றது.

இது ஏன் நடந்திருக்கின்றது, என்ன நிகழ்ந்திருக்கிறது. இம் மாற்றம் எப்படிப்பட்ட வாழ்வியலை நமக்கு கொண்டுவந்து சேர்க்கிறது என்று சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகிறது.

என்ன நிகழ்ந்திருக்கிறது என்று சொன்னால், நாம் மானுடவியல் சிந்தனையில் வாழ்வைப் பார்க்கவேண்டும். வாழ்வின் தொடக்கத்திலேயே, நம்முடைய பிறப்பே தொடர்புடையதுதான். கருப்பையில் இணைந்திருக்கிறோம். தொப்புள் கொடியின் வழியாக தாயுடன் இணைந்தே இருக்கின்றோம். இணைந்தே இருப்பதுதான் நம்முடைய தான்மையின் மூலம். ஆனால் தொப்புள் கொடி அறுக்கப்படுகின்றபோது நாம் தனித்தன்மையைப் பெறுகிறோம். We gain identity of ourselves, a total self. ஆனால் ஒரு உறவு தொடர்போடு இருக்கின்றோம்.

நம்முடைய சமூக வாழ்க்கையில் ஒரு அவசரம் நிறைந்திருக்கிறது. நுகர்வு கலாச்சாரத்தில் பணத்திற்குபின்னே ஓடிக்கொண்டே இருக்கின்றோம். மனைவியோடு பிள்ளைகளோடு இருப்பதற்கு, பேசுவதற்கு நேரமே இல்லை. ஓடிக்கொண்டே இருக்கின்றோம். குழந்தைகளுக்குப் பள்ளியில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள நேரமில்லை.

அவசரமும் அலைச்சலும் தேடலுமாக இருந்த இந்த வாழ்க்கை, திடீரென்று ஸ்தம்பித்துப் போய்விட்டது. குழந்தை காலையில் எழுவதற்கு முன்னே அலுவலகம் சென்று, உறங்கியபின் வந்த வாழ்க்கை. மனைவி என்ன செய்கிறார் என்ற கவலையே இல்லாமல் அலைந்த வாழ்க்கை. இப்பொழுது ஒரே இடத்தில் அனைவரும் அமர்ந்திருக்க வைத்திருக்கின்றது. அனைவரும் அமர்ந்து ஒருவர் மற்றவரைப் பார்க்கின்றோம். பார்க்கப் பார்க்க மற்றவர்களைப் பற்றித் தெரிந்துகொள்கிறோம்.

Familiarity breeds contempt. உண்மைகள் தெரியவருகின்றது. உண்மை, நன்மை, அழகு என்ற வாழ்க்கை மூடப்பட்டிருந்தது, பூசப்பட்டிருந்தது. இப்பொழுது தெரிய வருகின்றது. எது எப்போ எப்படி நிகழ்ந்தது என்ற பல கேள்விகள் நமக்குள் எழுகின்றது. அது அழுத்தத்தில் முடிவடைகின்றது. இந்த அழுத்தம் குடும்பத்தைச் சிதைக்கிறது என்று நினைக்கிறோம். இது சிதைவல்ல, ஒரு சுத்திகரிப்பு. இதுவரைக்கும் இருந்த பொய்யான வாழ்க்கை இப்பொழுது படம்பிடித்து காட்டப்படுகின்றது. திரைகள் விலகுகின்றது. நம்முடைய உண்மை நிலைப் புரிந்துகொள்ளப்படுகிறது. இப்பொழுது என்ன நிகழும். இதை நிதர்சனமாகப் புரிந்துகொள்பவர்கள். மாற்றம் பெற்றவர்களாக மாறுவார்கள். உண்மையான நிலைக்குச் சென்றுவிடுவார்கள்.

இந்த சமூக இடைவெளி, நம்மை ஒன்றுகூடி, குடும்பமாக வாழ வழிசெய்திருக்கின்றது. புரிதலோடு வாழ்வதற்கு வாய்ப்பு உருவாக்கியிருக்கின்றது. பொருளைத் தேடி அலைந்த வாழ்க்கை அற்றுப்போய், தேவை எதுவோ அந்த தேவையை மட்டும் தேடுவோம் என்ற வாழ்க்கை உருவாகி இருக்கின்றது. என் பள்ளி, என் அலுவலகம் என்று இருந்த வாழ்க்கையில் இப்பொழுது என் குடும்பம் முதன்மையானதாகி விடுகிறது.

எனவே வாழ்க்கையை நன்மைக்கு இட்டுச்செல்லும் நகர்வாகத்தான் பார்க்கவேண்டுமே தவிர, அவற்றை ஒரு சிதைவாகப் பார்க்கக்கூடாது. ஒரு திருமணமான கணவன் இப்படிதான் இருந்திருக்கின்றார் என்று அவர் மேல் வெறுப்பும் வரலாம், புரிதலும் வரலாம். இந்த புரிதலினால் மனமாற்றம் வரும். இந்த மனமாற்றத்தினால் வாழ்வு மாற்றம் வரும். அதற்கு ஏற்றாற்போல நாம் புதிய பழக்க வழக்கங்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

ஆக மாற்றங்களைப் பற்றிக் கவலைப்படாமல், அதை எப்படி கையாள்வது என்று பார்க்கவேண்டும். கையாளுவது எப்படி? அது நாம் உட்கார்ந்து பேசுவதில்தான், நாம் உரையாடுவதில்தான் உள்ளது. ஒவ்வொருவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது. ஒருவருடைய நோக்கங்களை மற்றவர்கள் புரிந்துகொள்வது. அப்பொழுது ஒரு பகிர்வு இருக்கும். இந்த புரிந்துகொள்வதோடு உங்கள் வாழ்க்கையை இன்னும் ஆறுமாதங்கள் உங்கள் குழந்தைகளோடு மனைவியோடு இரண்டு சுவர்களுக்குள்ளே வாழ ஆரம்பித்தீர்கள் என்றால், வாழ்க்கை அற்புதமானதாக மாறிவிடும். குடும்பமே உலகமாகிவிடும். உங்கள் உலகமாக இருந்த பள்ளி, அலுவலகம், பீச், விற்பனை அங்காடிகள், பூங்காக்கள் எல்லாம் இப்பொழுது உங்கள் வீட்டிற்குள் வருகின்றபோது, உலகம் குடும்பமாக மாறிவிடும். மாறிவிடும் அந்த குடும்பத்தைக் கையாளுகிறவன்தான், ஒரு உலகத்தை ஆளுகிறவன் ஆகிறான்.

அதற்கு மனமுதிர்ச்சி, அறிவு முதிர்ச்சி, உணர்வு முதிர்ச்சி உள்ளவர்களாக நாம் இருக்கவேண்டும். Emotionally intelligent person will handle the post Covid world. அதாவது மன முதிர்ச்சி, அறிவு முதிர்ச்சி, உணர்வு முதிர்ச்சி உள்ளவர்கள் இந்த மாற்றத்தைப் புரிந்துகொண்டு ஆரோக்கிமான வாழ்வு வாழ்வார்கள்.

பலருடைய அனுபவங்கள், கேள்விகள், சவால்கள், ஆதகங்களினால் விழைந்த தேடலின் நிறைவாக மானுடவியலாளர் முனைவர் ஜோ அருண் அவர்கள் இந்த உற்சாகமூட்டும் செய்தியை காணொளி மூலம் நம்முடன் பகிர்ந்துள்ளார்கள். அனைவரும் பார்த்து பயன்பெறுவோம். பிறருடன் பகிர்ந்துகொள்வோம். நம்முடைய கருத்துகளைத் தெரிவிப்போம்.

(முனைவர் ஜோ அருண் அவர்களின் காணொளி செய்தியின் ஒரு சுருக்கம்தான் இது. முழு காணொளியையும் பார்த்துப் பயன்பெறுங்கள்.)

Facebook: http://youtube.com/VeritasTamil

Twitter: http://twitter.com/VeritasTamil

Instagram: http://instagram.com/VeritasTamil

SoundCloud: http://soundcloud.com/VeritasTamil

Website: http://www.RadioVeritasTamil.org Blog: http://tamil.rvasia.org

**for non-commercial use only**

Add new comment

2 + 0 =