ஆலயங்கள் அடைக்கப்பட்டபோது...

ஆலயங்கள் அடைக்கப்பட்டபோது இல்லங்கள் ஆலயமாகின. கொரோனா வைரஸ் நம்முடைய தவக்காலத்தைப் புரட்டிப்போட்டது, நம்முடைய புனித வாரத்தின் ஆடம்பரத்தையும், பரபரப்பையும் தகர்த்தது. வீடுகளில் நம்மை முடங்க வைத்துவிட்டது. இதுபோன்ற ஒரு புனிதவாரம் வரக்கூடாது என்று புலம்பியவர்கள்தான் அதிகம். என்னைப் பொறுத்தவரை, இந்த தவக்காலமும் புனிதவாரமும் அர்த்தமுள்ளதாகவே இருந்திருக்கிறது.

ஆலயங்களில் சென்று வாடிக்கையாக வந்துபோகும் நிலைமாறி, நம்முடைய வீடுகள் அனைத்தும் ஆலயங்களாக மாறியிருக்கின்றன. குடும்பமாக இணைந்து செபிக்கத் தூண்டியிருக்கின்றன. செபமும், பிராத்தனைகளும் இல்லாத வாழ்க்கை வெறுமையானதுதான் என்பதை பலரும் உணர்ந்திருக்கிறார்கள். பராக்குகள் பார்த்து செபித்த காலம்போய் வீடுகளில் ஒருமித்த மனதுடன் செபிக்க பழகியிருக்கின்றோம்.

இணைந்து செபித்தலால் குடும்ப உறவுகளில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நம்முடைய நம்பிக்கையில் வளர்ச்சி பெருகுகியிருக்கின்றது. இவ்வாறாக நம்முடைய வாழ்வுநிலை புனிதம் அடைந்திருக்கின்றது. 

மாதா தொலைக்காட்சி மற்றும் வேரித்தாஸ் தமிழ் போன்ற பல்வேறு இணையதள சேவைகளின் வழியாக மக்கள் ஆன்மீக நிகழ்ச்சிகளைப் பார்த்தது மட்டுமல்ல, அவற்றை எவ்வாறு தனதாக்கிக்கொண்டு தியானமுறையில் இணைவது என்பதையெல்லாம் கற்றிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் ஆலயங்களை அடைத்தாலும், நம்முடைய குடும்பங்களை ஆலயங்களாக உருவாக்கி, குடும்பம் குட்டித் திருஅவை என்பதை நிரூபித்திருக்கின்றது. 
 

Add new comment

14 + 5 =