ருவாண்டா இனப்படுகொலைப் பற்றிய சர்வதேச பிரதிபலிப்பு தினம் | April 7


        உருவாண்டா இனப்படுகொலை (Rwanda Genocide) என்பது 1994 ஆம் ஆண்டு உருவாண்டாவில் நூறாயிரக்கணக்கில் துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும். அப்போது 500000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். பெருந்தொகையானோர் ஊனமாக்கப்பட்டோர். பெரும் உடைமை அழிவும் நிகழ்ந்தது. இந்த படுகொலை தொடங்கிய நாள் ஏப்ரல் 7, 1994. பெரும்பான்மையினரான ஊட்டு இன அரசின் இனவாதக் கொள்கைகள் இந்தப் படுகொலைகளுக்கு காரணமாக அமைந்தன.
        கேரின் என்ற பெண் கூறுகிறார்: என்னுடைய தந்தை யார் என்று என் மகன் கேட்டுக் கொண்டே இருந்தான். ஆனால் என்னை பாலியல் வல்லுறவு செய்த 100க்கும் மேற்பட்ட ஆண்களில், அவனுடைய தந்தை யார் என்று என்னால் சொல்ல முடியவில்லை என்றார். 1994 ஆம் ஆண்டில் 100 நாட்கள் நடந்த படுகொலைகளின்போது நடந்த பாலியல் வல்லுறவு செயல்களால் பிறந்த குழந்தைகள் எத்தனை என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது. 
        போருக்கான ஆயுதமாக பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நம் சமூகத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்தது. சிரியா முதல் கொலம்பியா வரையும், காங்கோ மக்கள் குடியரசு முதல் மியான்மர் வரையும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அந்தக் கொடுமைகளில் ,ருந்து உயிர் தப்பியவர்கள், போரில் பாலியல் வன்முறையை ஒழிக்கும் ஐ.நா. தினத்தைக் குறிப்பிடும் வகையில் #Endrapeinwar என்ற ஹேஷ்டேக்-ஐ பயன்படுத்தி சமூக வலைதளங்களில் தங்கள் கதைகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Add new comment

5 + 10 =