நிகழ்வுகள்


Events

1. புதிதாக நான்கு அருளாளர்கள்: திருஅவையில் புதிதாக நால்வர் அருளாளர்களாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு, திருத்தந்தை இசைவு தெரிவித்துள்ளார். தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த இவர்கள் நால்வரும், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் நாடுகளின் பொதுநலன்களுக்கு நற்பணிகள் ஆற்றியவர்கள். புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு உயர்த்தும் பணிகளை ஆற்றும், திருப்பீட பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்து இந்த விவரங்களைச் சமர்ப்பித்தார்.

2. நன்றி தெரிவித்த திருத்தந்தை:

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், இத்தாலியில் துணிவுடன் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், நலப்பணியாளர்கள் மற்றும், அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடி காலம், நாம் கூடுதலாக, ஆன்மீகத்திலும், அறநெறியிலும் வளர உதவியுள்ளது என்றும், கடவுள் நம்மைக் கைவிடவில்லை என்பதற்கு, மதநம்பிக்கையாளர்களாகிய நாம் சான்றுபகரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் இறைத்தந்தை தேவைப்படுகிறார், அவரிடம் செபிப்போம், செபமே, நம்பிக்கையின் ஆன்மா என்றும் எடுத்துரைத்தார்.

 3. பழத்தில் கண்டெடுக்கப்பட்ட ஊசி:

ஆஸ்திரேலியாவில் மை உட் ட்ரின்ஹ் என்ற  52  வயதுடைய பெண் ஒருவர், ஸ்ட்ராபெர்ரி பண்ணையில் மேற்பார்வையாளராக பணியாற்றிவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அலுவலகத்தில் நடந்த பிரச்னைக்கு பழி வாங்கும் விதமாக, ஸ்ட்ராபெர்ரி பழங்களுக்கும் ஊசிகளை வைத்து ஏற்றுமதி செய்துள்ளார். இது சந்தைகளில் விற்கப்பட்டு மக்கள் வாங்கி சென்றுள்ளனர். இந்த பழங்களை உண்ட மக்கள் ஊசிகளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், டன் கணக்கில் ஸ்டர்பேர்ரி பழங்கள் குப்பையில் கொட்டப்பட்டுள்ளன. பழங்களுக்கு கூட பாதுக்காப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது.

4. மீட்கப்பட்ட வெளிநாட்டவர்:

மார்ச் மாதத்தின் மத்தியில் டேனியல் மாக்ஸ் மற்றும் ஜோஸ் இவன் என்னும் சுவிஸ் மற்றும் பிரேசில் நாட்டவர்கள் கொலம்பியாவில் சுற்றுலா சென்றபோது கொரில்லாப்படையினரிடம் சிக்கியுள்ளனர். சுமார் 11 இடங்களில் மாறி மாறி தங்கவைக்கப்பட்ட அந்த சுற்றுலாப்பயணிகள் இருவரிடமும் பல மில்லியன் பெஸோக்களை கேட்டு மிரட்டியுள்ளனர் கடத்தல்காரர்கள். கொலம்பிய ராணுவத்தின் கடத்தல் எதிர்ப்பு பிரிவினர் அவர்களை மீட்டதோடு, காதல்காரர்களில் ஒருவனையும் கைதி செய்துள்ளனர். ஒன்றரை மாதங்களாக தங்கள் குடும்பத்தினரை பார்க்கவில்லை என்று கூறும் டேனியல் மற்றும் ஜோஸ், தங்களை காப்பாற்றிய கொலம்பிய ராணுவத்திற்கு நன்றி கூறினார்.

5. இந்தியா - சீனா இடைவெளி:

இந்தியா சீனா இடையே கடுமையாக அதிகரித்து வரும் ராணுவம் மற்றும் ராஜதந்திர பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் இரண்டாவது மற்றும் ஐந்தாவது பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே விவாகரத்து பற்றிய பேச்சுவார்த்தைகள் எழுந்துள்ளன. சீற்றத்தில் இருக்கும் இந்திய தரப்பு, சீனாவுடன் வர்த்தக உறவுகளை முறித்து கொள்வது குறித்து உரத்து பேசத் தொடங்கிவிட்டது. திடீரெண்டு நாட்டின் முதன்மையான எதிரி என்ற அந்தஸ்து பாகிஸ்தானிடமிருந்து சீனாவுக்கு கிடைத்துவிட்டது போல் தோன்றுகிறது.

6. சீனாவிற்கு அதிகரிக்கும் தேயிலை உற்பத்தி:

ஒட்டுமொத்த அளவில் கடந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து தேயிலை ஏற்றுமதி அதற்கு முந்தைய அண்டைக்காட்டிலும் 5.6 % குறைந்தது. 25.45 கோடி கோலிவிலிருந்து 24 கோடி கிலோவாக குறைந்துள்ளதாக தேயிலை வாரியம் கூறியிருக்கிறது. அதே நேரம் சீனாவுக்கு கடந்த நிதியாண்டில் தேயிலை ஏற்றுமதி 1.5 கோடி கிலோவிலிருந்து 1.27 லட்சம் கோலிவாக அதிகரித்துள்ளது.

7. இயற்கையும் யோகாவும்:

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 650 நபர்களுக்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவ முறை சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அவர்களின் உடல்நலனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மருத்துவர்கள் கண்காணித்துவருகிறார்கள். காரோணவிருக்கு ஆங்கில மருத்துவ முறையில் தடுப்பு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை என்ற நிலை நீடிக்கிறது. வைட்டமின் மாத்திரைகள் வழங்குவதோடு இந்திய மருத்துவ முறைகளையும் பின்பற்றவேண்டும் என இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அறிவித்ததை அடுத்து, தமிழகத்திலும் இயற்கை, யோகா மருத்துவத்தில் சோதனை செய்யப்படுகிறது.

8. செவ்வாய் கோளுக்கு முதல்முறையாக அரபு விண்கலம்:

செவ்வாய் கோளுக்கு முதல்முறையாக அரபு விண்கலம் ஒன்று பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படும். செவ்வாய் கிரகத்தை சென்றடைய 493 மில்லியன் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டும். எனவே ஏழு மாதங்கள் பயணித்த பிறகே செவ்வாய் கோளைச் சுற்றிவருவதற்காக திட்டமிட்டபட்ட வட்ட பாதையை இந்த விண்கலம் சென்றடையும்.

9. அதிகரிக்கும் மருத்துவர்களின் உயிரிழப்பு:

உலகளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா மூன்றாவது இடத்தில உள்ளது. 5 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 500 மருத்துவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை அரசு முறையாக கையாளவில்லை என குற்றசாட்டுகள் நீடிக்கும் நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

10. கனடா அரசின் புதிய நடவடிக்கை:

கொரோனா வைரஸை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதை குறித்து கனடா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு நடவடிக்கையாக கொரோனா பரவலைக் கண்காணித்து, அதுபற்றி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கான அறிதிறன் பேசிச் செயலி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். மேலும் அந்த செயலியை பொதுமக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், அவர்களது ரகசிய தகவல்கள் பாதுகாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

Add new comment

12 + 3 =