சிரியாவிற்காக திருத்தந்தையின் குரல்


50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழகத்தின் நிலைக்கு, சிரியா தற்போது இழித்துச் சென்று நிறுத்தப்பட்டுள்ளது. 2011 காலகட்டத்தில் சிரியாவின் ஆட்சியாளர்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட மக்கள் போராட்டம், தற்போது உள்நாட்டுப்போராக உருவாகி தன் மக்களையே கொல்லும் அளவிற்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

சிரியாவின் ஆட்சி வரலாறு:
சிரியா, 90 சதவிகித முஸ்லீம்கள் கொண்ட நாடு. அங்கு சன்னி, ஷியா என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. அதில் 90 சதவிகித மக்கள் சன்னி பிரிவை சார்ந்தவர்கள். ஆனால் மீதமுள்ள 10 சதவீத மக்கள் கொண்ட ஷியா பிரிவை சார்ந்தவர்களே மேல்தட்டு மக்களாக விளங்குகிறார்கள். முதல்தர அரசாங்க பணிகள் அனைத்தும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. பிற கீழ்த்தட்டு அரசு வேளைகளில் மட்டுமே சன்னி பிரிவினர் பணியாற்ற முடியும். 

தந்தை - மகன் ஆட்சி முறை:
1970 முதல் ஹபீஸ் அல் அசாத் ஆட்சி புரிந்து வந்தார். இட ஒதுக்கீட்டு பிரச்னை தவிர, மற்ற பிரெச்சனைகளில் கொஞ்சம் நியாயமாகவே நடந்து கொண்டார். 1998 இல் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே, அவரது முதல் மகன் பஸால் ஆட்சியில் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அனால் விதியின் சதியால் பதவி ஏற்கும் சில நாட்களுக்கு முன் பஸால் கார் விபத்தில் மரணம் அடைந்தார். மீதம் இருந்தது பஷர் அல் ஆசாத் மட்டுமே. இவர் நன்றாக படித்தவர் என்றாலும் அரசியலில் அனுபவம் இல்லாதவர். 

ஹபீஸ் 2000 இல் மரணம் அடைந்தார். அதன் பிறகு தான் பஷர் அல் ஆசாத் அதிபராக பதவி ஏற்றார். 'படித்த இளம் நபர் ஆட்சிக்கு வருகிறார். நல்லாட்சி மலரும்' என்றும் பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவரால் அடுத்த தலைமுறையே காவு வாங்கப்படும் என்பது அப்போது யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

போரின் தொடக்கம்:
அவர் ஆட்சிக்கு வந்ததும் சன்னி ஷியா பிரச்சனையை உருவாக்கினார். இதனால் போர் உருவானது. 48 வருடமாக தந்தை - மகன் ஆட்சி செய்தும் மக்களுக்குப் போதிய வேலை இல்லை, சரியான மருத்துவம் இல்லை, உணவு இல்லை என்று மூன்றாம் தர நாடாக சிரியா மாறி இருப்பதை எதிர்த்து தான் மக்கள் வீதி இறங்கி போராடினர். கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி முதல், அதிபர் பஷர் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் தொடங்கிய சண்டை இன்றுவரை ஓயவில்லை. இது வரை இந்த போரினால் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அமைதி நிலவ ஆதரவு:
ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக போர் இடம்பெற்றுவரும் சிரியாவில், எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது மக்கள்  பசிப் பிரச்சனையில் அவதிப்படுகின்றனர் என்று ஐ.நா. நிறுவனம் எச்சரித்துள்ள வேளையில் மத்திய கிழக்குப் பகுதியில் துன்புறும் மக்களுக்கு ஆதரவாக நிதியுதவிகள் வழங்கப்படுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். ஜூன் 28, ஞாயிற்றுக்கிழமையன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை ஜெப உரை வழங்கிய பின்னர் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியா மற்றும் ப்ருசெல்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் நான்காவது கருத்தரங்கில், நாடுகள் நிதியுதவிக்கு உறுதி வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்நாடுகளில் எண்ணற்ற சிறார் பசியினால் துன்புறுகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, நாடுகளின் தலைவர்கள், மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி நிலவ உழைக்குமாறு வலியுறுத்தினார். 

 

Add new comment

20 + 0 =