சர்வதேச குழந்தைகளின் புத்தக தினம் | April 2


        1967 ஆம் ஆண்டு முதல் டானிஷ் குழந்தை எழுத்தாளர் ஹான்ஸ் கிருஸ்டியன் ஆண்டர்சன் பிறந்த தினத்தை சர்வதேச குழந்தைகள் புத்தக தினமாக உலகெங்கும் ஏப்ரல் 2 இல் கொண்டாடுகின்றனர். ஆண்டர்சன் ஒரு டேனிஷ் எழுத்தாளர் ஆவார். தி அக்லி டக்லிங் மற்றும் தி லிட்டில் மெர்மெய்ட் உள்ளிட்ட குழந்தைகளின் கதைகள் இவரின் சிறப்பு. இந்த இரு கதைகளும் டிஸ்னியின் பெரிய திரைக்கு வந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஐடீடீலு (ஐவெநசயெவழையெட டீழயசன ழn டீழழமள குழச லுழரபெ Pநழிடந) என்னும் நிறுவனத்தில் இணைக்கப்பட்டுள்ள 70 நாடுகளில், ஏதேனும் ஒரு நாட்டில் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.  சிறுவர் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டுள்ள நம் நாடும் இதில் முக்கியப் பங்குவகிக்கிறது. 
        புத்தகம் என்பது பள்ளிக்கூடத்திற்கு பொதி சுமப்பதை போல பிஞ்சுகள் எடுத்து செல்லும் புத்தகங்களை மட்டும் குறிப்பதில்லை. பாடதிட்டத்தினை தாண்டி ஏராளமான விடயங்கள் மொட்டுகள் கற்றுக்கொள்ள வேண்டும். சின்ன வயதிலேயே படிக்கும் ஆர்வத்தினை ஏற்படுத்தினால், குழந்தைகள் வளர வளர ஆர்வமும் பெருகும். தற்போது தமிழில் குழந்தைகளுக்கான தரமான புத்தகங்கள் நிறைய வரத் துவங்கியுள்ளது. ஆனாலும் வாழ்வை செம்மைப்படுத்தும், ரசிக்க தூண்டும், அறிவை விரிவாக்க உதவும், நம்பிக்கை தரும் புத்தகங்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாளில் எதுவும் நடந்துவிடப்போவதில்லை, ஆனால் அதற்கான துவக்கம் எந்த ஒரு நாளாகவும் அமைந்துவிடலாம்.
        குழந்தைகள் தொலைக்காட்சிகள் முன்னே அமர்ந்து நேரங்களை தொலைத்து வருகின்றனர். கார்ட்டூன்கள் சிறார்களின் கற்பனை வளத்தை பெருக்குவதாக இருந்தாலும், வேகமாக மாறும் காட்சிகளாலும் நிறங்களாலும், கண்கள் சீர்குலைந்து போகின்றது. புத்தகங்களை வாசிக்க நாம் அவர்களை ஊக்குவிக்கவேண்டும். நாம் என்ன செய்கின்றோமே அதனை நிச்சயம் குழந்தைகளும் செய்வார்கள். புத்தகம் ஒன்றினை எடுத்து நீங்கள் படித்து பாருங்கள், குழந்தையும் படிக்க துவங்கிவிடும். உங்களை சுற்றி இருக்கும் குழந்தைகளைக்கு உங்களால் முடிந்த புத்தகம் ஒன்றினை பரிசாக வழங்குங்கள். நாமும் சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை கொண்டாடுவோம்.

 

Add new comment

1 + 0 =