எட்டிப்பிடித்த எவெரெஸ்ட்டின் கதை!


        ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 29 ஆம் நாள் சர்வதேச எவரெஸ்ட் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. 1953 ஆம் ஆண்டில் இதே நாளில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி, சாதனையை நிகழ்த்திய முதல் மனிதர்கள் நேபாளத்தின் டென்சிங் நோர்கே மற்றும் நியூசிலாந்தின் எட்மண்ட் ஹிலாரி.
        1952 ஆம் ஆண்டு எவரெஸ்ட் உச்சியை அடைய சுவிஸ் மலையேறும் குழு தோல்வியைச் சந்தித்து திரும்பி வந்தது. 1953 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மலையேறும் குழுவுடன் தனது இமயத்தை நோக்கிய பயணத்தைத் தொடந்தார் ஹிலரி. இந்தக் குழுவும், காலநிலை மாறுபாட்டால் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால் ஹிலரியும், டென்சிங் நார்கேயும் எவரெஸ்ட் உச்சியை தொட்டே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் சற்றும் பின் வாங்கவில்லை. அதனால், இவர்கள் இருவரும் அதிக எடையுள்ள பொருட்களை சுமந்து கொண்டு தங்கள் குழுவுக்கு விடைசொல்லி புறப்பட்டனர். பல நாட்களாக பனி பாலைவனத்தில் சுற்றித் திரிந்து, உயரமான மலைகளை கடந்து, கடைசியாக மே 29 ஆம் நாள், சரியாக 11.30 மணிக்கு எவராலும் எட்டமுடியாத எவரெஸ்ட் உச்சியில் தங்களின் கால்தடங்களைப் பதித்தனர். இந்த சிறப்பு மிக்க சாதனைக்கு பரிசாக இரண்டாம் எலிசபெத் மகாராணி, ஹிலரிக்கு 'சர்' பட்டம் வழங்கி கௌரவித்தார். 
        ஒருமுறை எவரெஸ்ட்டின் உச்சத்தைத் தொட்டபோது என்ன நினைத்தீர்கள்? என சிலர் கேட்டபோது எத்தனையோ பேர் சாதிக்கத் துடித்ததை சாதிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்ததை நினைத்து பிரமிப்பு ஏற்பட்டது. இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்தவர் டென்சிங் நார்கே" என்று கூறினார். இவர்கள் இருவரில், யார் முதலில் எவரெஸ்ட் உச்சியில் முதலில் காலடி வைத்தனர் என்ற பெரிய சந்தேகம் எழுந்தது. அதற்கு டென்சிங் நார்கே, 'ஹிலரிதான் முதலில் உச்சியை அடைந்தார். அடுத்த சில நிமிடங்களில்தான் நான் உச்சியை அடைந்தேன்" என்று தெரிவித்து டென்சிங் நார்கே குழப்பத்தைத் தீர்த்தார்.

 

Add new comment

4 + 9 =