உலக பிக்னிக் (குட்டி சுற்றுலா) நாள் | ஜீன் 18


உலக பிக்னிக் (குட்டி சுற்றுலா) நாள்
  

 ஜூன் 18 உலக பிக்னிக் தினம். நாளெல்லாம் உழைத்துச் சோர்வடையும் மனிதன் தனக்கு உகந்தவர்களோடு சேர்ந்து தரமான நேரத்தை இயற்கைச் சூழலில் செலவிட விரும்புவதை இத்தகைய பிக்னிக் போன்ற தினங்கள் உறுதி செய்கின்றன. நம் வீடுகளில் மொட்டை மாடியிலோ அல்லது நதிக்கரையிலோ கடற்கரையிலோ நிலாச்சோறு சாப்பிடும் வழக்கம் நம்மிடையே உள்ளது. அதனையே வெளிநாட்டில் உலக பிக்னிக் தினம் என்று பெயர் சூட்டி கொண்டாடப்படுகிறார்கள் என்று கூடச் சொல்லலாம்.
    

பிக்னிக் நமக்கு ஒன்றும் புதிதல்ல. உறவுகள் வீட்டில் நிறைந்திருக்கும் போது நிலா சாப்பாடு சாப்பிடுவது என்பது பாரம்பரியமான ஒன்றுதான். அவரவர் வழக்கமான உணவுகளுடன் பழங்களுடன் ஆடலும் பாடலுமாக அன்றைய பொழுதை கழிப்பது மிக இன்பமானது. அது பௌர்ணமியன்று முழு நிலா வெளிச்சத்தில் இயற்கையோடு இயைந்து சுற்றம் சூழ அனுபவிக்கும் தினமாக நிறைந்து இருக்கும். இந்த கோரோனா காலத்தில் நம் குடும்பத்தினரோடு அப்படிப்பட்ட ஒரு நிலாச்சோறு நமக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவும்.
கூடைகளில் சாப்பாடு தண்ணீர் குளிர்பானங்கள் பழங்கள் தின்பண்டங்கள் ஜமுக்காளம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் தோட்டங்களுக்கும் தோப்புகளுக்கும் சென்று அமர்ந்து உண்பது என்பது அவ்வப்போது தேவைதான்.

 

Add new comment

5 + 0 =