உலக நாடக அரங்க நாள் (World Theatre day) | March 27


        1962 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் நாள் பாரீசில் துவங்கிய ‘தியேட்டர் ஆஃப் நேஷன்ஸ்’ திருவிழாவை நினைவு கூறும் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் பல்வேறு தேசிய, சர்வதே நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.; முக்கிய நிகழ்வாக, உலக அளவில்; புகழ்பெற்ற நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும் உலக கலாச்சார அமைதி பற்றியும் ஒரு செய்தி வெளியிடுவார். முதன்முதலில் செய்தியை 1962 ஆம் ஆண்டில் பிரான்சிஸ் எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான சான் காக்டோ விடுத்தார்.
        சினிமாவின் படையெடுப்புக்கு முன்பு, தமிழர்களின் வாழ்வில் பின்னி பிணைந்திருந்தது நாடகம் மட்டுமே. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நாடகத்தின் தாக்கம் ஆழமாக இருந்தது. எடுத்துக்காட்டாக, ‘நல்லதங்காள்’ நாடகம் நடந்துகொண்டிருந்தது. நல்லதங்காளுக்கு 7 குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையையும் தாலாட்டு பாடியபடி கிணற்றில் வீசுவாள் நல்லதங்காள். ஒரு கிராமத்தில் இந்த நாடகம் நடந்தபோது, நல்லதங்காளாக நடித்த பெண், ஒரு குழந்தையை மட்டும் தாலாட்டு பாடாமல் கிணற்றில் போட்டாளாம். நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கொதித்துவிட்டார்கள். எப்படி தாலாட்டு பாடாமல் குழந்தையை கிணற்றில் போடலாம் என்று கேட்டு மேடை ஏறிவிட்டார்கள். கிணற்றில் போட்ட குழந்தையை எடுத்துக்கொடுத்து, தாலாட்டு பாடியபின் போடச்சொன்னார்களாம். 1940 வரை புராணம் சமுதாயச் சிந்தனை நாட்டுப்பற்று போன்ற வையே நாடகங்களில் இருந்தன. பின்னர் சுதந்திர வேட்கையை உணர்த்தும் விதமான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. தமிழ் நாடக மேடைகளில் சீர்திருத்த நாடகங்களை அறிமுகம் செய்தவர் பம்மல் சம்பந்த முதலியார். சினிமா வந்த பிறகு நாடகத்துக்கான மவுசு குறைய ஆரம்பித்தது. 

Add new comment

9 + 0 =