உலக இனப்பாகுபாடு ஒழிப்பு தினம் | March 21


         இனக்கொள்கைக்கு எந்தவித அடிப்படை விஞ்ஞானமும் இல்லை. மனிதனை இனங்களாகப் பிரிக்கப்படுவது எந்தவிதத்திலும் சரியானதல்ல. மனிதர்களுக்கு இடையே இனபாகுபாடு பார்ப்பது சமூக விரோதச் செயல் என கூறும் ஐ.நா பொதுசபை, உலகின் பல நாடுகளில் இனவெறி இருப்பதைக் கருத்தில்கொண்டு 1966 ஆம் ஆண்டு மார்ச் 21ஐ சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு (ஐவெநசயெவழையெட னுயல கழச வாந நுடiஅiயெவழைn ழக சுயஉயைட னுளைஉசiஅiயெவழைn) தினமாக அறிவித்தது. 
        1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாளில் தென்னாப்பிரிக்காவின் ஷாடெங்கிலுள்ள ஷார்ப்வில் நகர்ப்புறத்தில் நிகழ்ந்த, இனவொதுக்கலுக்கு எதிரான அமைதிப்பேரணியின்போது அந்நாட்டுக் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டனர். தென்னாப்பிரிக்காவில் மனித உரிமைகள் நாளாகக் கடைபிடிக்கப்படும் இவ்விடுமுறை நாளில் இனப்பாகுபாடு காலத்தில் மக்களாட்சிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடி உயிரிழந்தோரை நினைவுகூர்கின்றனர். 

 

Add new comment

18 + 2 =