ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் சிலந்திகள்!


ஆஸ்திரேலியா வெள்ளப்பெருக்கு காரணமாக எட்டுகால் கொண்டவிஷப் பூச்சிகள் வீட்டிற்குள் நுழையலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கன மழை பெய்து கடும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்திவிட்டது. இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக கொடிய விஷமுள்ள எட்டுக்கால் பூச்சிகள் பொதுமக்களின் வீடுகளுக்குள் நுழையலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த வெள்ளப்பெருக்கினால் அடித்து வரப்பட்டுள்ள எட்டுக்கால் பூச்சிகள் உலகிலேயே அதிக விஷமுள்ள இனத்தை சேர்ந்தவை என்று கூறப்பட்டுள்ளது.

இதனால், வெள்ளம் காரணமாக எட்டுக்கால் பூச்சியால் பிளேக் போன்ற நோய் பரவ வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தினங்களுக்கு பின் நேற்று தான் சூரிய வெளிச்சம் தென்பட்டுள்ளதால் அந்த சூரிய வெளிச்சம் காரணமாக உடனடியாக விஷத் தன்மை கொண்ட எட்டுக்கால் பூச்சிகள் படையெடுக்கக்கூடும் என்று எச்சரிந்துள்ளதால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

இந்த விஷமுள்ள எட்டுக்கால் பூச்சிகள் கடித்து ஏற்கெனவே சிலர் இறந்திருப்பதும் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இறப்பிற்கு வேறு காரணங்களும் இருக்கும் என்கிறார்கள். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டபின் இறப்பு வீதம் மிக அதிகம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே பயம் வேண்டாம் என்கிறார்கள்.
ஆயினும் மக்கள் பயத்தில் உள்ளனர். 

ஆஸ்திரேலிய சிலந்தி இனங்கள் 
ஆஸ்திரேலிய சிலந்திகளின் முழுமையான சரிபார்ப்பு பட்டியலை ஆஸ்திரேலிய தொல்பொருள் ஆராச்சி அமைப்பின்  வலைத் தளத்தில் காணலாம். இது உலக ஸ்பைடர் பட்டியலிலிருந்து  (WSC) இருந்து சுயாதீனமாக அவ்வப்போது புதுப்பிக்கப்படுகிறது.

Add new comment

2 + 2 =