சுத்தம் தரும் சுகமே உயிர்ப்பு

இன்று உயிர்ப்பு பெருவிழாவைக் கொண்டாடவேண்டும். கொண்டாடும் சூழ்நிலையில் இந்த உலகமும், நம் நாடும் இருக்கின்றதா. இல்லை. எல்லாருமே உள்ளே முடிங்கிக் கிடக்கிறார்கள். நாளை என்ன நடக்குமோ என்ற அங்கலாய்ப்பும் பயமும் இருக்கிறது. இதேபோலதான் இயேசு இறந்தபோது இயேசுவைப் பின்பற்றியவர்களும் அவர் வார்த்தையைக் கேட்டவர்களும் இருந்திருப்பார்கள்.  அவர்கள் மனநிலையில்தான் நாமும் இன்று இருக்கிறோம்.

இந்த சூழ்நிலையில் உயிர்ப்பு பெருவிழாவின் செய்தி எதுவாக இருக்கும். சுத்தம் சுகம் தரும். இன்று கொரோனா தாக்காமல் இருக்க நாம் உடல் சுத்ததோடு இருக்கவேண்டும். நம்முடைய உடல் எதிர்ப்புசக்தி கொண்டிருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். 

சுத்தம் என்பது உடல், உளம், மனம், செயல் சுத்தம். சுயத்தனிமை, எவையெல்லாம் நம்மில் நோயை உண்டாக்குமோ அதிலிருந்து நாம் விலகி இருப்பதுதான் உயிர்ப்பினைத் தரும். எல்லாவிதமான அழுக்கிலிருந்து நம்மைக் கழுவிக்கொள்ளவேண்டும். 

இயேசு இறந்ததும் இதற்காகத்தான். உலகத்தின் அழுக்கை கழுவுவதற்கு தம்மையேக் கொடுத்தார். நாம் அனைவரும் அழுக்கை ஆபரணமாக அணிந்துகொண்டோம். எனவே நம்மை தூய்மைப்படுத்த நமக்காக துயரப்பட்டு இறந்தார். இன்று வைரஸ் அழுக்கைக் கழுவ உடல்சுத்தமும். பல்வேறு நிலையில் நடைபெறும் அநீதிகளைக் களைய மனசுத்தம் வேண்டும். தீமைசெய்வதிலிருந்து அநீதி விளைவிப்பதிலிருந்து நாம் விலகிக்கொண்டிருந்தால் நாம் தூய்மையடைவோம், அதுதான் உயிர்ப்பு.

இவ்வுலகில் அன்புக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களிடமிருந்து விலகி இருப்பதும், அவர்களை எதிர்த்துக் கேட்கும் கோபமும் சுத்தத்தின் வெளிப்பாடு. எனவே உடலை மட்டும் சுத்தம் செய்வதோடு நின்றுவிடாமல், நம்முடைய உள்ளத்தை தூய்மைப்படுத்துவோம். உயிர்த்த இறைவன், வார்த்தையான இறைவன் நம்மிலிருந்து செயலாற்றுவார். 

தொடர்பில் கொடுக்கப்பட்ட காணொளிக்காட்சியின் சுருக்கம்

Add new comment

1 + 18 =