அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார் - திருப்பாடல்கள் 55:22. நம் கவலைகளை முற்றிலும் ஆண்டவர் பாதத்தில் ஒப்படைத்திடவேண்டும். பிறகு அதை பற்றி நினைத்து கொண்டு இருக்க கூடாது. அவர் தன் பிள்ளைகள் அழிவை காண விடமாட்டார். 

அன்னாள் ஆலயத்திற்கு வந்து அழுது புலம்பினாள். ஆண்டவர் பாதத்தில் கொட்டினாள். எல்லா கவலைகளையும் ஆலயத்திலே போட்டுவிட்டாள். ஆண்டவர் அன்னாவினுடைய குரலை கேட்டார்.  அரசர்களுக்கெல்லாம் அபிசேகம் செய்யும் உயர்வான மகன் சாமுவேல் பிறந்தான்.

சிந்தனை: நாம் நம் கவலைகளை முழுவதுமாக அவர் பாதத்தில் வைக்கிறோமா ? இல்லை ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்  என தத்தளித்து கொண்டு இருக்கிறோமா?

செபம்: ஆண்டவரே உம்மிலே நம்பிக்கை கொண்டு எல்லாவற்றையும் உம்மிடம் போட்டுவிட்டு கவலையின்றி வாழும் மனதிடனை எங்களுக்கு தாரும்.  

Add new comment

14 + 1 =