அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே கடவுளே!  நொறுங்கிய குற்றம் உணர்ந்த  உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை - திருப்பாடல் 51:17. தாவீது ராஜா ஆண்டவர் விரும்பாத பெரிய பாவத்தை  செய்துவிட்டு அதற்காக மனம் வருந்தி உணவின்றி உறக்கமின்றி மனம் நொந்து அழுதபோது ஆண்டவர் தாவீது ராஜாவினுடைய நொறுங்கிய மனதைப் பார்த்து அவரை மீண்டும் ஏற்றுக்கொண்டார். உருக்கமான இறக்கண்களால் உன்னை மீண்டும் சேர்த்துகொண்டேன் என்று சொல்கிறார்.   

சிந்தனை:  நாம் பாவம் செய்யும் பொழுது உண்மையிலேயே மனம் நொந்து வருந்துகின்றோமா? இல்லை பாவம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோமா?

செபம்: ஆண்டவரே செய்த பாவங்களுக்கு உண்மையாக மனம் வருந்தி அழும் நல்ல உள்ளத்தை தாரும்.

Add new comment

9 + 8 =