அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Daily Prayer to God

கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து மடியில் போடுவார்கள் - லூக்கா 6:38. சாரி பார்த்து ஊரில் வாழ்ந்த விதவை தன்னிடம் வந்து உணவு கேட்ட தேவ மனிதன் எலியாவுக்கு தன்னிடம் கடைசியாக இருந்த மாவில் அடை பண்ணி கொடுத்தாள். நடந்தது என்ன? அந்த ஊரில் பஞ்சம் தீரும் வரை அவள் வீட்டு மாவும் எண்ணெயும் குறையவில்லை. 

சிந்தனை: பிறர் நம்மிடம் உதவி என்று வரும் வரும் போது நம்மால் முடிந்த உதவி செய்கிறோமா? அல்லது ஆறுதல் வார்த்தையாவது பேசுகிறோமா? 

செபம்: ஆண்டவரே எங்களால் முடிந்த அளவு பிறருக்கு உதவி செய்யும் நல்ல மனதையும் பணவசதியும் நல்ல உள்ளத்தையும் தாரும்.

Add new comment

6 + 5 =