மீட்கவே

எகிப்து நாட்டினின்று அவர்களை வெளியேறச் செய்தபோது ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே! தலைமுறைதோறும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஆண்டவருக்கென்று திருவிழிப்பு கொண்டாடவேண்டிய இரவும் இதுவே.

விடுதலைப் பயணம்12-42

ஆண்டவர் தன் மக்களை மிகவும் அன்பு செய்கிறார். நானூற்று முப்பதாம் ஆண்டு முடிவுபெற்ற அதே நாளில் ஆண்டவர் இஸ்ரேல் மக்களுக்கு எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை கொடுத்தார்.

 இது கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு முன் உதாரணமாக அமைந்தது.   இயேசுவும் நம்மை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கவே தன்னையே உயிர்பலியாக கொடுத்து மரித்து உயிர்த்தெழுந்தார்.

  எனவே ஆண்டுதோறும் இந்த நியமத்தை அதன் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என கடவுள் கூறியது போல இந்நிகழ்வை கிருஸ்துக்கு முன்னும் கிறிஸ்து பின்னும் பாஸ்கா பெரு விழாவாக கொண்டாடுகிறோம் 

இதன் பொருள் என்ன’ என்றால்  ‘ஆண்டவர் தம் கைவன்மையால் அடிமை வீடாகிய எகிப்திலிருந்து , பாவத்திலிருந்து  நம்மை வெளியேறச் செய்தார் என்பதாகும்.

நம் ஆண்டவர் அடிமைத்தனத்திலிருந்து நமக்கு விடுதலை அளிக்கும் வெற்றி வீரர்.  அவரது அரசுக்கு முடிவு இராது. இன்று நம் பாவ பழக்கங்கள், மற்றும் பிற அடிமைத்தனத்திலிருந்து நமக்கு விடுதலை தருகிறார். 

 

ஆண்டவரே , எங்களை பாதுகாத்து கொள்ளும்.  எங்களை அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரான என்னும் கொடிய வைரஸின் பிடியிலிருந்து எங்களுக்கு விடுதலை தாரும். எங்களை பாவங்களை எங்களை விட்டு தூரமாக்கும். நாங்கள்  பயமின்றி சுதந்திரமாக எங்கள் கடமைகளை செய்யவும் ஆலய வழிபாடுகளில் ஈடுபடவும் செய்தருளும்.  ஆமென்.

 

Add new comment

4 + 2 =