மியூனிக் முறை


Munich

1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகம் வந்த அருள்பணியாளர் எட்மண்ட் பெக்கர் அவர்கள் 1961 ஆம் ஆண்டு முதல் மறைக்கல்வி போதனா முறையில் மியூனிக் முறை அல்லது உளவியல் முறை என்னும் புதிய முறையை அறிமுகப்படுத்தினார். 

விவிலியத்தில் மீட்பின் வரலாற்றை மையப்பொருளாகக் கொண்டு “செய்தல் வழி கற்றல்” என்ற முறை செர்மனி நாட்டிலுள்ள மியூனிக் நகரத்தில் அறிமுகப்படுத்தி வெற்றிகண்டது வரலாற்று உண்மை. அதே முறையைத் தமிழகத்திலும் முழு வீச்சோடு செயல்படுத்தி ஏறக்குறைய 10 ஆண்டுகள் உழைத்துக் கனியைத் தந்தவர் அருள்பணியாளர் பெக்கர். தனது அனுபவங்களைக் கோர்வைப்படுத்தி இந்தியா முழுவதும் பயன்பெறும் வகையில் பொதுவான மறைக்கல்வி, உளவியல் முறையான போதனாமுறையையும், பல்வேறு திட்டங்களையும் கொண்டு அகில இந்திய ஆயர்பேரவையின் கவனத்தை ஈர்;த்தார் (நன்றி: திருஅவை வரலாறு-8, முனைவர் திரவியம், 218).

இந்த மியூனிக் முறை அந்த காலக்கட்டத்தில் அனைவரும் மறைக்கல்வியை ஆர்வமுடன் கற்றுக்கொள்ள பெரும் வழிகாட்டுதலாக, தூண்டுதலாக இருந்தது. நாம் வாழ்ந்துவரும் இந்த சமூக ஊடகங்கள் நம்மை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள இந்தக் காலக்கட்டத்தில் நாம் நம்முடைய மக்களுக்கு, பிள்ளைகளுக்கு எத்தகைய முறைகளைக் கையாளப்போகிறோம். இது காலத்தின் கட்டாயம், தமிழக வரலாறு கற்றுத்தரும் பாடம்.
இந்த காலக்கட்டத்தில் நம்முடைய பிள்ளைகள் கடவுளை இன்னும் நெருங்கிச் செல்வதற்கான புதிய அனுகுமுறைகளைக் கண்டறிவோம். நம்முடைய குடும்பங்கள் குட்டித்திருஅவைகளாக மாறுவதற்கு உதவுவோம்.   

உங்களுடைய புதிய கருத்துக்கள் அறிவுரைகள் வரவேற்கப்படுகின்றது.
 

Add new comment

2 + 17 =