மியான்மாரில் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 முதல் 30 வரை மியான்மார் சென்றார். இன்றைய மியான்மார் பர்மா என்று நம்மில் பலரால் இன்றும் அழைக்கப்படுகிறது. மியான்மாருக்குச் செல்லும் முதல் திருத்தந்தை இவரே. அவர் மியான்மார் தலைநகருக்குச் சென்று அங்கிருந்த அரசு அதிகாரிகளைச் சந்தித்தார். 29 ஆம் தேதி பொதுத்திருப்பலி நிறைவேற்றினார். அதன்பின்னர் புத்தமத உச்ச குழுவான சங்காவைச் சந்தித்தார். 

யங்கோனிலுள்ளப் பேராலயத்தில் இளையோருடன் திருப்பலி நிறைவேற்றினார். அப்போது நற்செய்திக்கு தைரியத்துடன் சாட்சிகளாக இருக்கவேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தினார். 

மியான்மாரின் இளைஞர்களே, உண்மையில் ஒரு நற்செய்தி என ஆழமாகக் கூறினார். அவர்கள்தான் திருஅவை கிறிஸ்துவில் கொண்டுள்ள நம்பிக்கையின் உணரக்கூடிய அடையாளம். அவர்கள் கொண்டுவருகின்ற மகிழ்ச்சியும் எதிர்நோக்கும் எப்பொழுதும் மறையாது என்று உறுதியளித்தார். 

Add new comment

4 + 12 =