புனித லூயிஸ் மருத்துவமனையில் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாங்காக்கில் உள்ள புனித லூயிஸ் மருத்துவமனைக்குச் சென்றார். இந்த ஆண்டு அந்த மருத்துவமனையின் 120 ஆண்டுவிழா என்பது குறிப்பிடத்தக்கது. எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே கடவுள் இருக்கிறார் என்ற இலக்குடன் 1898 ஆம் தொடங்கப்பட்டது இந்த மருத்துவமனை. இம் மருத்துவமனையில் பணிபுரியும் 700 பணியாளர்களை மருத்துவமனை அரங்கத்தில் சந்தித்தார். 

அப்போது, திருஅவை தாய்லாந்து மக்களுக்கு, குறிப்பாக மிகவும் தேவையில் இருப்பவர்களுக்கு, செய்கின்ற விலைமதிப்புள்ள தொண்டிற்கு நான் சாட்சியாய் நிற்பதை ஒரு ஆசீராகப் பார்க்கிறேன் என்றார் திருத்தந்தை.

நீங்கள் ஒவ்வொருவரும் நலவாழ்வுப் பணியின் மறைபரப்பு சீடர்கள். நீங்கள் ஒவ்வொரு மனிதரிலும் கடவுளைக் காணக்கூடிய திறன் பெற்றவர்கள், குறிப்பாக முதியவர்களிலும், இளைஞர்களிலும் மற்றும் மிகவும் நலிவுற்றவர்களிலும். 

நீங்கள் செய்யும் பணி மபெரும் இரக்கச் செயல். நல வாழ்வுப் பணியில்  உங்களுக்குள்ள அர்ப்பணம் மருத்துவத்துறையைக் கடந்து போற்றதற்குரியது. 

இறுதியில் அம் மருத்துவமனையிலிருந்த நோயாளிகளைச் சந்தித்தார்.

Add new comment

2 + 2 =