திரித்துவம் என்னும் கடையாணி | வளநாடன்


திரித்துவம் என்பது நமது கத்தோலிக்க நம்பிக்கையின் கடையாணி.

தொடக்கமும், முடிவுமில்லாதவரின்  இருப்பை மானுடம் அறிந்துகொள்ள,  இயேசு இங்கே அனுப்பப்பட்டதுபோல். 

மண்ணுலகில் நம்மைப்போல் மனிதனாய் வந்து பிறந்து, வாழ்ந்து கடந்த இயேசுவுக்குப்பின், இல்லாமையை இவ்வுலகு அறியக்கூடாதென்னும் முன் முயற்சியாய் வழங்கப்பட்ட மூவொரு இறையின் ஓரிறையே தூய ஆவியானவர். 

நான் உங்களுக்கு அனுப்பும் தூதரை, அத் தூய ஆவியை ஏற்றுக்கொள்வது,  உம் உய்வுக்கான ஒரே வழியென்கிறார் இறைமகன் இயேசு. 

தூய ஆவியாரோடு நெருங்கி நின்று அவர் பேசுவதைக் கேளுங்கள், அது என் மொழிபோலிருக்கும், அவராய் பேசாவர் என் சொற்களையே உங்களிடம் உரைப்பார், அதுவும் உண்மையானதாகவும், உண்மைக்கு வழிகாட்டுதலாக அது இருக்குமென்பதோடு, என்னிடமிருந்து பெற்றதாகவும் இருக்குமென இயேசு அன்றுரைத்ததைத்தான் 

( யோவான். 16:12-15) -ல் எழுதிப் பதிந்து வைத்ததென விவிலியம் நமக்கு இன்றுணர்த்துகிறது. 

விண்ணையும், மண்ணையும், உன்னையும், என்னையும் படைத்த தந்தையை, அவர் மகன் இயேசு மாட்சிப்படுத்தியதுபோல், இயேசுவை மாட்சிப்படுத்தவல்ல தூய ஆவியாரை நாம் மாட்சிப்படுத்துவோம். 

 

விவிலியச் சொற்றொடரின் அடிப்படையில்

கவி.வளநாடன்.

Add new comment

1 + 0 =