தாய் முகமும், தாய் சதையுமாக மாறவேண்டிய நற்செய்தி


Pope Francis with bishops

குருக்கள் துறவியர் மற்றும் நம்பிக்கையாளர்கள் அனைவரும் இறைவார்த்தையை பரப்பப் புதிய வழிமுறைகளைக் கண்டறியவேண்டுமென அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். 

நாம் இறைவார்த்தையை பரப்ப புதிய வழிகளைத் தேடவேண்டும். அந்த வழிகள் நம் ஆண்டவரை அறிந்துகொள்ள மற்றவர்கள் ஒரு ஆர்வத்தால் உந்திததள்ளப்படக் கூடியதாகவும், விழிப்புணர்விணைக்கொடுக்கக் கூடியதாகவும் எழுச்சிதரக்கூடியதாகவும் இருக்கவேண்டும் என சாம்பரான் மாவட்டத்திலுள்ள புனித பேதுரு பங்குத்தலத்தில் குருக்கள், துறவிகள், சபைத் தலைவர்களைச் சந்தித்தபோதுக் கூறினார். 

தாய்லாந்து நாட்டில் உள்ள பலருக்கும் கிறிஸ்தவம் என்பது வெளிநாட்டு நம்பிக்கையாகவும், வெளிநாட்டவரின் மதமாகவும் இருக்கிறது என்பதை அறிகின்றபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

எனவே நற்செய்தியானது தாய் மக்களின் கலாச்சாரத்துடன் பண்பாட்டுடன் இணைந்ததாக எடுத்துச்செல்லவேண்டும். நம்முடைய நற்செய்தியானது தாய்லாந்து முகமும், சதையும் கொண்டதாக இருக்கவேண்டும். மாறாக வெளிநாட்டவர்களுக்கான மதமாகப் பார்க்கப்படக்கூடாது. 

அந்த அந்த மக்களின் பேச்சுவழக்கு மொழிகளில் அறிக்கையிடக்கூடியதாக அமைவதற்கான வழிமுறைகளைக் காணவேண்டும். எவ்வாறென்றால், ஒரு தாய் தன்னுடைய குழுந்தைக்குப் பாடும் தாலாட்டுப்போல, நம்முடைய நற்செய்தியும் அவ்வளவாக அவர்கள் நெருக்கத்தை உணரக்கூடிய வகையில் தாய் முகமும், சதையும் கொடுக்கவேண்டும் என்கிறார் திருத்தந்தை.

இது மொழிபெயர்ப்பதல்ல, அதைவிட மேலாக, நம்முடைய நற்செய்தியின் வெளிநாட்டுத்தன்மை தோலுரிக்கப்படவேண்டும். இந்த மண்ணின் இசையோடு இயைந்துசெல்லவேண்டும். நம்மை நற்செய்தியின்மீது வேட்க்கைக்கொள்ள எது கவர்ந்திழுக்கிறதோ, அதே தன்மை நம்முடைய சகோதர சகோதரிகளின் இதயத்தைத் தொட்டு கவர்ந்திழுப்பதாக அமையும் அளவிற்கு நம்முடைய நற்செய்தி உருப்பெறவேண்டும். 

மேலும், இன்று திருஅவவை எல்லாருக்கும், எல்லா இடங்களிலும், எல்லா வேளைகளிலும், எந்த தயக்கமும், பயமும் இன்றி நற்செய்தியை அறிவிக்கமுடிகிறது என்பது உயிரோட்டமுள்ள செயலாகும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

பாங்காக் போஸ்ட் கூறுகிறது. ஏறக்குறைய 18000 கத்தோலிக்கர்கள் புனித பேதுரு ஆலயத்தைச் சுற்றிக் கூடியிருந்தார்கள். முன்னதாகவே வந்து திருத்தந்தையின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். அவர்களில் அதிகமானோர் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத் தொப்பி அணிந்து, வத்திக்கான கொடி அசைத்து, திருத்தந்தை பல்லாண்டு வாழ்க என குரலெழுப்பி, அவ் வழியே சென்ற திருத்தந்தையின் ஆசியைப் பெற்றார்கள்.

 

Add new comment

8 + 5 =