கருதினால் சார்லஸ் போ அவர்களின் செய்தி

கருதினால் சார்லஸ் போ அவர்கள் ஆசிய ஆயர் பேரவைகளின் தலைவராகப் பணியாற்றுகிறார். நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆசியத் திருத்தூதுப் பயணத்தைப் பற்றிய மடலை வெளியிட்டுள்ளார். அவற்றின் சுருக்கம். திருத்தந்தையின் இந்தப் பயணம் “கிறிஸ்தவர்களுக்கு ஒரு அருளின் நேரம்” எனச் சுட்டிக்காட்டுகிறார் கருதினால் போ.

நவீன காலத்தின் இறைவாக்கினர் என்றழைக்கப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மதம் சார்ந்தக் கருத்துகளைக் கொடுப்பவர் அல்ல, மாறாக மனிதம் மேம்படுத்தும் கருத்துக்களைக் கொடுக்கும் உலகத் தலைவர். 

திருத்தந்தை அவர்கள் எல்லா வகையான மக்களையும் சென்றடைய விரும்புகிறார். எனவேதான் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையராக இருக்கும் விளிம்பு நாடுகளுக்குச் செல்ல ஆசைப்படுகிறார். இது ஒதுக்கப்பட்டவர்கள்மீதும், விளிம்பில் இருப்பவர்கள்மீதும் அவர் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது.

எனவேதான் திருத்தந்தையின் மியான்மார், பங்களாதேசத்தின் திருத்தூதுப் பயணம் ஒரு அருளும் அற்புதமுமு; நிறைந்ததாக அமைந்தது. அவர் ஒரு அமைதியின் திருப்பயணியாக வந்தார். அவருடைய பிரசன்னம் அளவிட முடியாத மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் ஒவ்வொரு மக்களின் இதயத்துக்குள்ளும் கொண்டுவந்தது. 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எங்களோடு மியான்மாரில் இருந்தபோது, மியான்மார் முழுவதும் எதிர்நோக்குடன் இருந்தது. அவர் கத்தோலிக்க திருஅவையையும், இளைஞர்களையும் அமைதியின் கருவியாக செயல்பட வேண்டுமென அழைப்புவிடுத்தார். 

திருத்தந்தை அவர்கள் கிழக்கத்திய மதங்களின்மீது கொண்டுள்ள ஆர்வமும், இயற்கையின் மீதுள்ள அன்பும், உயிரினங்கள் அனைத்தின்மீதும் கொண்டுள்ள அக்கறை அவருடைய இறைவா உமக்கே புகழ் (Laudate Si) என்னும் மடலில் வெளிப்பட்டது. 

அண்மையில் அமேசான் பற்றிய சிறப்பு ஆயர் பேரவையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட திருத்தந்தை அவர்கள் அனைத்து உயிர்களையும் கடவுளின் பிரசன்னத்தின் பகுதி எனக்கொள்ளும் கிழக்கத்திய ஆன்மீகப் பாரம்பரியத்தைப் போற்றினார். 

இறுதியில், காலநிலை மாற்றத்தையும், ஏழ்மையையும் திருத்தந்தை அவர்களின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானப் பிரச்சனைகளாக கருதுகிறார். காலநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை தாய்லாந்தும், ஜப்பானும் பல பெரிய சவால்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த பிரச்சனையில் திருத்தந்தையின் குரல் எல்லா மக்களாலும் கேட்கப்படும் என உறுதியாக நம்புகிறேன் என்கிறார் கருதினால் போ.

திருத்தந்தையின் இந்த திருத்தூதுப் பயணத்தில் (பொருளாதார சுற்றுசூழல் நீதி), ஆசியா நீதியின் இறைவாக்கினரை வரவேற்கும். ஆசிய பல மதங்களின் பண்பாடுகளின் தொட்டில் என்பதை வலியுறுத்தி, இந்த ஆன்மீகச் சந்திப்பு இந்த நாடுகளிலுள்ள அனைவருக்கும் ஆசீயாகவும், அமைதியின் வளமையின் ஒரு புதிய இதயமாகவும் இந்த கண்டத்திற்கும் அமையும் எனக் கூறி தன்னுடைய மடலை கருதினால் சார்லஸ் போ அவர்கள் நிறைவுசெய்கிறார்கள்.

Add new comment

10 + 1 =