இறைவார்த்தை ஞாயிறு


Word Of God - # ordinary Sunday

பொதுக்காலம் 3 ஆம் ஞாயிறை இறைவார்த்தை ஞாயிறாக கொண்டாடத் திருஅவை நமக்கு அழைப்புவிடுக்கிறது. அதாவது வருகின்ற 26 ஆம் தேதி ஞாயிறு அன்று நாம் அனைவரும் கடவுள்மீதும் அவரது வார்த்தையின்மீதும் ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தி, அன்புசெலுத்தி, பிரமாணிக்கத்துடன் சாட்சியாக இருக்க நமக்கு அழைப்புவிடுக்கிறது. 

கடந்த அக்டோபர் மாதப் புள்ளிவிபரப்படி, விவிலியம் முழுவதும் 698 மொழிகளில், விவிலியத்தின் சில பகுதிகள் 3385 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உலகத்தில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்ற நூல் விவிலியம். ஆனால் அவை நம் கைகளில் இல்லாததால் தூசு படிந்துள்ளதாக பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் கூறியுள்ளார். 

மறைநூலை அறியாதவர், இறைவனை அறியாதவர் என்னும் புனித ஜெரோமின் வார்த்தையின் ஒளியில் நாம் நம்முடைய குடும்பங்களில் பங்குகளில் இறைவார்த்தையின்மீது பேரார்வத்தை தூண்டும்விதத்தில் இந்த ஞாயிறு வழிபாட்டை ஏற்பாடு செய்து கொண்டாட அழைக்கப்படுகிறது. 

(நன்றி: வத்திக்கான் செய்திகள்)

Add new comment

2 + 14 =