இயேசுவின் பிறப்பு அறிவிப்புப் பெருவிழா | March 25


Feast of Annunciation - Mrach 25

இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு அல்லது மங்கள வார்த்தை அறிவிப்பு என்பது லூக்கா நற்செய்தி 1:26-3 இல் வாசிப்பதுபோல கபிரியேல் வானதூதர் கன்னி மரியாவுக்கு தோன்றி அவர் தூய ஆவியினால் கருவுற்று ஒரு மகனைப் பெற்று இயேசுவின் தாயாவார் என்பதை அறிவித்த நிகழ்வாகும். இந்த நிகழ்வின் போதே மரியாவிடம் கபிரியேல் தூதர் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு இயேசு என பெயரிடச்சொன்னார். மேலும் திருமுழுக்கு யோவானின் பிறப்பையும் மரியாவுக்கு அறிவித்தார். மரியாவின் உறவினரான எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருவுற்றிருக்கிறார் எனவும் கருவுற இயலாதவர் என சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம் எனவும் கபிரியேல் மரியாவுக்கு அறிவித்தார். கத்தோலிக்க திருஅவையில், இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு நிகழ்வு செபமாலையின் மகிழ்ச்சி மறையுண்மைகளில் முதல் மறையுண்மையாகும்.

Add new comment

5 + 5 =