வாழ்வை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் - சிகரம், ஒரு மூங்கில் மரம் 2

நம்முடைய வாழ்க்கையைப் பற்றி சரியாக நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கான முதல் நிலை என்னவென்று பார்த்தோமானால்: நாம் முதலில் வெற்றியாளர்களின் வாழ்வுமுறையை பார்த்து, படித்து   தெரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் ஏன் நம்மைவிட நன்றாக செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். அவர்களை மற்ற அனைவரிடமிருந்தும் தனியாக பிரித்துக்காட்டுவது என்னதென்று சிந்திக்கவேண்டும். 

அவர்களிடமிருந்து கண்டறிந்ததிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக்கொண்டவற்றை நம்முடைய இலக்கோடு இணைத்து, வாழ்வைத் தொடங்கவேண்டும்.

வெற்றியாளர்களின் வாழ்வில் பொதுவான ஒரு பண்புநலனாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அது என்னவென்றால் - ஒரே பார்வை, நேர்கொண்டபார்வை, இலக்கை மட்டுமே சிந்தித்து, அதைநோக்கி மட்டும் செல்லும், ஓர் புதிய பாதை.

நீங்களும் அந்த புதிய பாதைக்கு தயாரா?

Add new comment

14 + 2 =