வாழ்வும் ஒளியும்

வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது; உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்.

திருப்பாடல்கள் 36:9

தாகம் என்பது ஒரு உணர்வு. அது உடலுக்கு மட்டுமல்ல ஆன்மாவிற்கும் உண்டு.
உடல் தாகம் நீரினால் தணியும்.

ஆன்ம தாகம் ஆண்டவரில் மட்டுமே தணியும்.
நீரே எங்கள் மூச்சு என்பதை நாங்கள் உணர்ந்து இருக்கின்றோம் நன்றி ஆண்டவரே. இந்த உலக தாக்குதலில் எங்கள் ஆன்மா வரண்டு இருக்கிறது. நீரூற்றாய் எனில் பொங்கிவாரும். எங்கள் கண்கள் மங்கி இருக்கின்றன. அவற்றிற்கு ஒளி நீரே. 

உமது ஊற்றிள்  நாங்கள் பருகவும் உமது ஒளியில் நாங்கள் காணவும் இன்று எங்களுக்கு அருளும்.

இன்று எங்கள் வாழ்வு மாறுபடுவதாக. எங்கள் உள்ளம் புத்துணர்வு அடைவதாக. உம்முடைய ஆவியானவர் அபிஷேகம் செய்து எங்களை நிரப்பி இருப்பதை நாங்கள் காண்போமாக.
ஆமென்!
 

Add new comment

10 + 8 =