நிறைவுள்ளோராக

ஆண்டவரின் இரக்கத்தை முன்னிட்டும் மானிடருக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டும் அவர்கள் அவருக்கு புகழ் சாற்றுவார்களாக. ஏனெனில் வெறுங்கையருக்கு அவர் நிறைவளித்தார். பசியுற்றோரை நன்மைகளால் நிரப்பினார்.

திருப்பாடல்கள் 107 : 8 , 9

 

ஆண்டவரே இன்றைய திருப்பாடலில் வருவதுபோல, வெறும் கையோடு நாங்கள் உம் முன் நிற்கின்றோம். எங்கள் கைகளை ஆசீர்வதியும். இந்த நாளின் முடிவில் இந்த கைகள் நிறைய சேர்த்து வைத்திருப்பதாக. தானம், தர்மம், புண்ணியம் எல்லாவற்றிற்கும் மேலாக உம் அருள் நிறைய பெற்றவர்களாக நாங்கள் இருக்க செய்தருளும் ஆண்டவரே. இந்த நாளிலே பசியுற்றோருக்கு நாங்கள் உதவ செய்தருளும் ஆண்டவரே. 

எங்களுடைய வேலைகளிலே எங்களுடைய இல்லங்களிலே நாங்கள் எப்பொழுதும், 'இந்த கைகள் எப்பொழுதும் காலையில் ஆண்டவர் முன் நீட்டி இருந்த கைகள். இதிலே ஆண்டவரது பிரசன்னம் இருக்கின்றது. இந்த கைகளின் வழியாக நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களையும் ஆண்டவர் ஆசீர்வாதிக்கின்றார். அவரே செய்கின்றார்' என்று நாங்கள் தொட்டவை உம் பெயரால் அதிகரிக்க செய்தருளும் ஆண்டவரே. இதிலே எங்களுக்கு பரிபூரண குணத்தையும் உடல்நலத்தையும் மனநலத்தையும் தந்தருளும்.

நாங்கள் பிறரை தொடுகின்ற நேரத்திலே அவர்களுக்கு இறைஆசீரையும் உம்முடைய நிறைஅருளையும் தந்தருளும் ஆண்டவரே. இந்த நாள் இனிய நாளாக உம்முடைய பிரசன்னத்தின் நாளாக இருப்பதாக. ஆமென்.

Add new comment

1 + 2 =