நம்மை முடக்கும் தயக்கம் - சிகரம், ஒரு மூங்கில் மரம் 5

வெற்றியாளனுக்கும் தோல்வியாளருக்குமுள்ள இடைவெளி என்ன தெரியுமா? தயக்கம். அப்படின்னா என்ன என்று கேட்கிறீர்களா? எதைச் செய்யவேண்டும் என்ற அறிவு நமக்கு இருக்கும், ஆனால் அதைச் செய்வதற்கு தயங்குவோம். இது சாதாரணமாக எல்லாரிடமும் இருக்கக்கூடியதுதான். இது மனிதனின் அமைப்பிலேயே உள்ளது. மனிதனுடைய மூளை மனிதனை எல்லா நிலையிலும் பாதுகாக்க முயலும்.

எனவேதான் ஆபத்தான, புதிய முயற்சிகளைச் செய்ய தடைபோடும். அதை மிகவும் அதிக ஆபத்துள்ளதாக மிகைப்படுத்திக் காட்டும்.  நாம் தயங்குகிறோம். ஆனால் அந்த நேரத்தில நாம் ஒரு 5 நொடிகள் தாமதிக்காமல், நம்முடைய மூளையை நாம் விரும்பியதைச் செய்ய ஆணையிடவேண்டும். அதைச் செஞ்சுதான் பார்ப்போம் என்று சொல்லி, தயங்காமல் செய்யத் தொடங்கினால், நம் மூளை நமக்கேற்றார்போல அது அப்படியே மாறிவிடும். 

ஆனால் அந்த 5 நொடிகள் நாம் எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்வதற்கு தாமதித்தோம் என்றால், மூளை இடையில்; புகுந்து நம்மை பாதுகாப்பது என்ற பெயரில் நம்மை முயலவிடாமலேயே முடக்கிவிடும்.

காலையில் 5 மணிக்கு எழுந்திருக்கவேண்டும். நிறைய படிக்கவேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டோம் என்றால், மணியோசைக் கேட்டவுடன் நாம் ஸ்நூஸ் பட்டணை அழுத்த மூளை சொல்லும், அந்த 5 நொடிகளில் இல்லை, நான் எழுந்து படிக்கவேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் மூளைக் கேட்டுவிடும். 

அதேபோலதான் இலக்குகளை நிர்ணயம் செய்துவிட்டு, அதைப் பார்த்துக்கொண்டே இருந்தால் பயன் இல்லை. நாம் உடனடியாக அதற்கான முயற்சிகளையும் வேலையையும் தொடங்கவேண்டும். தயக்கம் வாழ்வை அழித்துவிடும்.

Add new comment

1 + 0 =