திட்டமிடலின் 7 படிநிலைகள் - சிகரம், ஒரு மூங்கில் மரம் 8

நாம் வெற்றியாளராக, இலக்கை நோக்கிப் பயணிக்கும் சாதனையாளராக மாற, திட்டமிடுதல் அவசியம். திட்டமிடுதற்கான 7 படிநிலைகள்:

1. நமக்கு என்ன வேண்டுமென நாம் முடிவெடுக்கவேண்டும். எதைச் சொய்யவேண்டும் என முடிவுசெய்யவேண்டும். தேவையில்லாததைச் செய்வதை நிறுத்திவிடவேண்டும். அப்படியென்றால் ஸ்டீபன் கோவே சொல்வதுபோல சரியான இடத்தில் ஏணியை வைத்தால்தான் அது வழுக்கிவிடாமல் இருக்கும்.

2. நம் முடிவுகளை எல்லாம் ஒவ்வொன்றாக ஒரு தாளில் எழுதவேண்டும்.

3. அவற்றை செய்வதற்கான கால அளவை நிர்ணயம் செய்யவேண்டும்.

4. அதனடிப்படையில் ஒரு அட்டவணை தயாரிக்க வேண்டும். அந்த அட்டவணையில் அதைச் செய்வதற்கு எவ்வளவு காலம், எந்த நேரத்தில் செய்யவேண்டும், ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் செய்யவேண்டும், எவற்றையெல்லாம் செய்யவேண்டும், புதியதாக வருபவற்றை எங்கு சேர்க்கவேண்டும் என்பதெல்லாம் அந்த அட்டவணையில் இடம்பெறவேண்டும்.

5. அட்டவணையில் உள்ளவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் முதன்மைப்படுத்தி வரிசைப்படுத்தவேண்டும். எதை முதலில் செய்யவேண்டும், ஏன் அதை முதலில் செய்யவேண்டும். எதை பின்னால் செய்யலாம், ஏன் அதைப் பின்னால் செய்யலாம் என்பதனைத் தெளிவாகத் தெரிந்து வரிசைப்படுத்தவேண்டும்.

6. அதனடிப்படையில் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருக்கவேண்டும். ஒருவேளை அன்றைய நாளில் திட்டமிட்டபடி செய்யமுடியவில்லை என்றால், அடுத்த நாளில் அந்த மீதியான வேலைகளை எப்படி சேர்க்கலாம் என்பதைப் பார்த்து, அந்த அட்டவணையில் சேர்க்கவேண்டும்.

7. நம்மை நாமே முன்னே தள்ளிக்கொண்டே போகவேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தேக்கம் வந்துவிடக்கூடாது. நம்மை தொடர் ஓட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டே இருக்கவேண்டும். 

Add new comment

18 + 1 =