ஜுஸ்டுஸ் - BLESSED JUSTUS TAKAYAMA UKON - October 16, 2019

இன்று நமக்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த ஓர் அருளாளர் எடுத்துக்காட்டாய் கொடுக்கின்றார். அவர் பெயர் ஜுஸ்டுஸ் டகயம யுக்னோன். ஜப்பான் நாடு என்றாலே மறைசாட்சிகள் என்று பொருள் படுகின்றனர். அதிலே இவர் சற்று வேறுபட்ட மறைசாட்சி என்று சொல்லலாம். ஒரு பொது மனிதனாய், அரசியல்வாதியா, படை வீரனாய், சாமுராயாய் இவரை அறியலாம்.

இவர் மற்ற  மறைசாட்சியரை போன்று கொல்லப்படவில்லை ஆனால் தன்னுடைய சமுதாய அந்தஸ்தை இழந்து, மதிப்பையும் சொத்துக்களையும் துறந்தார். ஏனென்றால்  இயேசுவின் நற்செய்தியே  நம்பிக்கையாய் இருக்க. இவரது இயற்பெயர் ஹிக்கோகோரோ ஷிகேடோமோ பிறப்பு 1552 முதல் 1564, ஊர் டகயம கோட்டை நாரா அருகில் ஜப்பான். தந்தையின் பெயர் டகயம ஜுஷோ. டகயம என்பது குடும்பப் பெயர். சாமுராய் குடும்பம் என்பது ஜப்பான் சமுதாயத்திலே மிகவும் மதிக்கப்பட்ட ஒரு குடும்பம். நிறைய சொத்துக்களும் விளைநிலங்களும் கொண்டவர் குடும்பம்.

ஷோகுன் குடும்பங்களுக்கு அடுத்து சமுதாயத்தில் மிகவும் மதிக்கப்பட்ட குடும்பங்கள். 1563 லே இவர் தந்தை ஓர் இயேசு சபை துறவி அருட்தந்தை கஸ்பர் விடேலா என்பவர் ஏதோ போதித்துக் கொண்டே இருக்கிறார் என்பதை விசாரிக்க சென்று, அது நற்செய்தி என அறிந்து இயேசுவின் மீது அன்பு கொண்டு ஓர் கிறிஸ்தவராய் திரும்புகின்றார். வருகின்ற வழியிலேயே தன்னுடைய படை நபர்களையும், மனைவியும், பல குடும்பங்களையும் திருமுழுக்கு பெற ஏற்பாடு செய்கின்றார்.

1949 ஆம் ஆண்டு இயேசு சபைத் துறவி தந்தை பிரான்சிஸ் சேவியர் ஆல் இங்கு கிறிஸ்தவம் விதைக்கப்பட்டது. அவ்வாறு வருகின்ற வழியிலே அவருடைய மூத்த மகன் ஹிக்கோகோரோவை திருமுழுக்கு பெற செய்தார். இவரே ஜுஸ்டூஸ் என்ற திருமுழுக்கு பெயரால் அழைக்கப்பட்டார். குடும்பத்திற்கு ஏற்ற மகனாய், தன்னுடைய பாரம்பரியத்தையும், குடும்ப பெயரையும் காப்பாற்றுபவராய், சாமுராய் ஒரு படைவீரனாய், தன் குடும்பத்தையும் தன் நிலத்தையும் அரசனையும் பாதுகாக்கின்ற பணியில் ஈடுபட்டிருந்தார்.

 இரண்டு முறை அவர் தொடர்ந்து காயப்படவே, அவர் தங்கள் குடும்பத்து பொறுப்புகளில் இருக்கின்ற இடத்தையும் விதவைகளையும் அனாதைகளை பாதுகாக்கின்ற பணிக்கு நியமிக்கப் படுகின்றார். 1973 இல் இவர் தன் குடும்பங்களை பொறுப்பை நிர்ணயிக்கின்ற பணிக்கு அமர்த்தப்படுகின்றனர், தந்தைக்கு  மிகவும் வயதாகி விட்ட காரணத்தினால். இரண்டு ஆண்டுகள் கழித்து இவர் க்குஸ்தா என்கின்ற கிறிஸ்துவ பெண்ணை மணக்கிறார். இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறக்கிறார்கள். மகன்கள் இருவருமே குழந்தைகளாகவே இழந்து விடுகின்றனர்.

இவர் க்யோடோ நகரில் ஓர் திருச்சபையை நிறுவினார். குருத்துவ பயிற்சி பள்ளியையும் நிறுவினார். தன்னுடைய நிலத்தில் இருந்து நிறைய மக்கள் அங்கே சென்று குருக்கலாகவும்  மறை ஊழியர்களாகவும் பயிற்சி பெற்றனர். இவர் நற்செய்தியை எப்படி பரப்பினார் என்றால் ஜப்பான் உடைய தேநீர் பரிமாறும் சடங்கு இருந்தது. அதற்கு நிறைய பெரிய ஆட்களும் சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களும் அழைக்கப்படுவார்கள்.

அதை பயன்படுத்தி நற்செய்தியை அறிவித்து நிறைய அரசு பொறுப்பில் இருப்பவர்களை கிறிஸ்தவர்கள் ஆக்கினார். காலம் அப்படியே சென்று கொண்டிருக்க வில்லை. டோயோடோமி ஹடியோஷி 1583 இல் ஆட்சிக்கு வருகின்றார். ஏற்கனவே அரசாட்சியில்   இருக்கின்ற பலர் கிறிஸ்தவர்களாக இருப்பதை கண்டு அச்சம் கொண்டு இனி கிறிஸ்தவம் வரக்கூடாது, யாரும் அதைப் பின்பற்றக் கூடாது என்று சட்டத்தை ஏற்றுகிறார்.

அதை ஏற்று நிறைய சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் இருந்தவர்கள் கிறிஸ்தவத்தை விட்டுவிட நம்முடைய ஜுஸ்டூஸ் கிருஸ்துக்கக  சமுதாய பெயரை, அங்கீகாரத்தை, சொத்துகளை உதறுகிறார். அந்த அரசனுக்கு பின் வேறொருவரும் ஆட்சிக்கு வர,அவரும் கிறிஸ்தவத்தை மிகவும் இழிவாகவே நடத்துகின்றார். 1614 பிப்ரவரி 14 லே இவரும் இவருடைய குடும்பத்தாரும் சிறைபிடிக்கப்பட்டு நாகசாகி கொண்டு செல்லப்பட்டனர். அங்கே மற்ற மறைபோதகர்களுடன் சேர்த்து தலை துண்டித்து கொலை செய்ய பணிக்கப்பட்டனர். ஆனால் 1614 நவம்பர் 8 இல் ஒரு கப்பலிலே எல்லோரையும் ஏற்றி பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அனுப்பி விட்டார்கள். 

பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு வந்து 40 நாட்களுக்கு பின்  1615 பிப்ரவரியே இவர் மரணம் எய்தினார். இவர் நமக்கு ஓர் எடுத்துக்காட்டு, உண்மையான நேர்மையான அதிகாரத்தோடு கிறிஸ்தவத்தை வாழ்ந்தவர். இவர் இரத்தம் சிந்தி இறக்கவில்லை  என்றாலும் இவர் மறைசாட்சியராய் மதிக்கப்படுகிறார். ஏனென்றால் சொத்துகளும், பதவிகளும், அந்தஸ்தையும் துறந்து அதன் வழியாக வேறு நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு அங்கே இறந்ததையும் மக்கள் ஓர் மரிசாட்சிய  வாழ்வு என்றே அங்கீகரிக்கின்றனர். இவரை திருத்தந்தை பிரான்சிஸ் 2017 பிப்ரவரி 7 அருளாளராக அறிவித்தார்.

நம் என்ன செய்யலாம்?

Add new comment

3 + 2 =