சைமன் பிகே - October 21, 2019


Baba Simon | PC: parousie.over-blog.fr

மத்திய ஆப்பிரிக்காவில் கேமரூன் நாட்டிலே லோக் படோம்பில் 1906 ஆம் ஆண்டு சைமன் பிகே பிறந்தார். 1914ல்  எட்டு வயதில் இடியவில் ஓர் கத்தோலிக்க மறைப்பணியாளர் பள்ளியிலே துவக்க படிப்பை படித்தார். ஜெர்மனிய காலனிய ஆதிக்க நேரத்தின் கீழ் பலோட்டியன் மறைபணி சபையால் இந்த பள்ளி திறக்கப்பட்டது. பதினோரு வயதிலேயே துவக்கக் கல்வியை நிறைவு செய்தார். 1918 ஆகஸ்ட் 14 பன்னிரண்டாவது வயதில் இவர் அதே பகுதியில் திருமுழுக்குப் பெற்றார். இவருக்கு திருமுழுக்கு அளித்தவர் அருட்பணி லூயிஸ் ச்சவராட். அதற்கு அடுத்த நாளே திவ்யா நற்கருணையும் பெற்றார்.

பின்னர் இவர் ஓர் ஆசிரியர் ஆனார். முதலில் சவானா பள்ளியிலும் பின்னர் மத்திய இடியா மறைபணி பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1920இல் உள்நாட்டு ஆசிரியருக்கு உண்டான  பட்டத்தைப் பெற்றார். 1923-ல் இடியாவின் கத்தோலிக்க மறை பணியில் தலைமை ஆசிரியர் ஆனார். 1924 ஆகஸ்டில் இவர் இளங்குருமடத்திர்க்கு சென்றார்.

1927இல் புதிதாக திறக்கப்பட்ட உயர் குருமடம் சென்றார். தன்னுடைய தத்துவ இயலையம் இறையியலையும் அங்கே நிறைவு செய்தார். 1935 டிசம்பர் 8 இவர் குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். இது ஒரு சிறப்பான தருணம் கேமரூன் நாட்டிலேயே அங்கிருந்து உருவான முதல் ஐந்து குருக்களில் இவரும் ஒருவர். இவரின் முதல் பணியாக க்நோவயங் இடத்தில் பணியாற்ற அனுப்பப்பட்டார். இங்கு அவர் மக்கள் உள்நாட்டு கலாச்சாரங்களின் பின்பற்றுதல் என்பதை கடுமையாக சாடினார்.

1947 இல் இவர் டௌளாவின் நியூ பெல் பங்கு தளத்திற்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு அதனுடைய பங்கு தந்தையானார். நிறைய பொதுநிலையினர் இயக்கங்களை தொடங்கி வழி நடத்தினார். மிக தாராளமாக பங்கு, பள்ளி மற்றும் கத்தோலிக்க நடவடிக்கைகளுக்கு உறுதுணையாய் இருந்தார். 1947இல் எதேச்சையாக வடக்கு கேமரூனில் இருக்கின்ற மக்களைப் பற்றி வாசிக்க நேர்ந்தது. நிறைய மக்கள் கடவுளை அறியாது இருந்தார்கள். அப்போதிலிருந்தே அந்த மக்கள் மீது ஒரு ஈர்ப்பு இவருக்கு இருந்தது. அருளாளர் சார்லஸ் தே ஃபோகல்ட்ன் ஆன்மிகத்தை பின்பற்றி இயேசுவின் சிறிய சகோதரன் சிறிய சகோதரியின் தோழமை அமைப்பை உருவாக்கினார்.

1953இல்  இவர் இயேசுவின் சிறிய சகோதரர்கள் சபையில் சேர்ந்து ஓராண்டு நவ சன்யாச பயிற்சிக்காக அல்ஜீரியா சென்றார். இசூஸ் காரித்தாஸ் அமைப்பின் உலகளாவிய நிறுவனர்களில் இவரும் ஒருவரானார். அந்த அமைப்பில் கேமரூன் நாட்டில் இருந்து முதல் நபரும் இவரே. பின்பு இவர் அந்த சகோதரர்களோடு நிரந்தரமாய் தங்கியிருக்க சென்றுவிட்டார்.

1957 ஏப்ரல் 21 பாப்பரசர் பன்னிரண்டாம் பத்திநாதர் இன் 'நம்பிக்கையின் பரிசு' என்கின்ற திருத்தூது மடலின் சாரம்சத்தை பெற்று உலகளாவிய மறைப் பணியில் இருக்கின்ற சவால்களை சந்திக்கும் ஆற்றலை உள்வாங்கிக்கொண்டு தன்னுடைய நாட்டை விட்டு வடக்கு கேமரூனுக்கு சென்றார். 1959 பிப்ரவரியில் ஆயர் ப்ளுமெய் அவரின் வேண்டுதலின் பெயரில் இவர் டொகோமபரே என்னும் இடத்திற்கு சென்றார். இங்கே கீர்தி மக்களோடு மறை பணி செய்ய வேண்டும். இந்தப் பெயருக்கு பொருள் என்னவென்றால் கடவுளை அறியாதோர் என்று பொருள்படும். இந்தப் பகுதி பெரும்பாலும் சூடானை பூர்வீகமாகக் கொண்ட இஸ்லாமியர்களாள் நிரம்பியிருந்தது.

மருத்துவர் ஜோசப் மெஜாய் ஏற்கனவே இங்கே ஓர் மருத்துவமனையை ஏற்படுத்தியிருந்தார். இவர் சுவிஸ் நாட்டை  சேர்ந்தவர். இந்த பகுதியில் பிரெஞ்சு காலனிய ஆதிக்கத்தின் கீழ் சில தலைவர்களால் பருத்தி எவ்வாறு விதைத்து அறுவடை செய்ய வேண்டும் என்று  கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த பகுதி. இந்த பகுதியில் கிறிஸ்தவ மறை  பணியை துவக்குவது மிகவும் வித்தியாசமான அனுபவம்.

இது அவ்வளவு எளிதான பணியும் அல்ல. அருட்பணி சைமன் இந்த ஊரை சேர்ந்தவர் அல்ல. அந்த இனத்தைச் சேர்ந்தவரும் அல்ல. எனவே இவர் ஓர் ஆபத்தாக பார்க்கப்பட்டார். இருப்பினும் இவரும் ஆப்பிரிக்க நாட்டவர் என்பது சிறிது ஆறுதலாய் இருந்தது, ஆதரவையும் இருந்தது. துவக்கத்திலேயே இந்த மக்களுக்கு கற்றுக் கொடுப்பது முக்கிய பணியாக இருந்தது.

இவரின் தலைசிறந்த பணிகள் விரைவில் மக்கள் மத்தியில் இவருக்கு பாபா என்கின்ற செல்ல பெயரை பெற்றுத்தந்தது. இந்தப் பெயருக்கு பொருள் என்னவென்றால் அப்பா, முதுபெரும் தந்தை, முனிவர், வழிகாட்டி என ஒன்று சேர பொருள்படும். எல்லோருமே ஆணும், பெண்ணும், பெரியவரும், சிறியவரும், இஸ்லாமியரும், கடவுளை அறியாதோரும் இவரை பாபா என சரளமாக அழைக்கத் தொடங்கி விட்டனர்.

நம்பிக்கையினால் ஆபிரகாமுக்கு எப்படி மக்கள்  தோன்றினாரோ  அதுபோன்று பாபா சைமன் இந்த பகுதியை கடவுளின் வாக்குறுதியை நம்பி இருந்தார். நம்பிக்கையும் இயேசுவோடு நட்புமே முழு மனிதனாய், ஆன்மீகத்திற்கு எதிரான  பாவத்திலிருந்தும், அறியாமையிலிருந்து, துன்பங்களிலிருந்தும், பொருளாதார தீமைகளிலிருந்தும் விடுவிக்க வல்லது என்பதை நன்கு அறிந்திருந்தார்.

பள்ளிகளே இவருடைய முக்கிய வழித்தடம் ஆயிற்று. அறியாமைக்கு எதிராய் போரிடக் என்ற கற்பிக்கின்ற ஓர் தளமாய் பள்ளி உருவெடுத்தது. அறியாமைக்கும், அடக்குமுறைக்கும், பயத்துக்கும் முற்றுப்புள்ளி பள்ளியில் இருந்தே தொடங்கவல்லது என்பதை அறிந்திருந்தார். மனித மாண்பை பெற வழியை கற்றுக்கொடுத்தார். பள்ளியை கல்வியை வீட்டிற்கு கொண்டு வந்தார்.

அந்த மக்களுக்கு மரங்களே எல்லாம்.  எனவே மரங்களின் கீழ் பள்ளிகளை நடத்தினார். டொகொம்பராவில் இருக்கின்ற தூய யோசேப்பு பள்ளிக்கு சென்று அந்தப் பள்ளிகளை இவருடைய பணி தளத்திலும் நிறுவ கேட்டுக்கொண்டார். தங்கி படிக்கும் பள்ளிகளை ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே நிறுவினார்.

இவை இப்பொழுது மரியாயின் பணியாளர்களால் நடத்தப்படுகின்றது. பாபா சைமன் இந்த கீர்தி மக்களுக்கு இஸ்லாமியர்களை தங்களுடைய உடன்பிறந்த சகோதரர்கள் ஆகவும் இஸ்லாமியர்களுக்கு இவர்களை உடன்பிறந்த சகோதரிகள் ஆகவும் பார்க்க பழக கற்றுக்கொடுத்தார்.

பள்ளிகளின் வழியாக உடல் சுகாதாரத்தையும், அநியாயங்களை தட்டிக் கேட்கவும், உலகளாவிய சகோதரத்துவத்தை ஏற்படுத்தவும் செய்தார். இந்த மக்களுடைய வாழ்வாதாரத்தில் உண்மையான முன்னேற்றத்தை கொண்டு வந்தார். நீண்டகாலமாக இந்த மக்கள் புறக்கணிக்கப்பட்டு இருந்தனர். இரண்டாம் வத்திக்கான் சங்கம் அழைக்கும் பல்சமய உரையாடலுக்கு இவர் முன்னோடி என்று கூறலாம்.

தனக்குப் பின் இந்த பணி தொடர என்ன செய்யவேண்டும் என்று யோசித்து பயணங்களை மேற்கொண்டார். அந்த சமூகத்தில் இருந்தும் வெளியில் இருந்தும் மாணவர்களை தொடர்ந்து வழி நடத்த வேண்டியிருந்தது. இதற்காக பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், இஸ்ரேல் சென்றார். அங்கே இந்த மக்களுடைய வாழ்வாதாரத்தை, ஏழ்மையை, அவர்களுடைய துன்பங்களை எடுத்துரைத்தார்

அவர்களுக்கு இவர்களின் சிறப்பம்சங்கள்,  திருச்சபை மீது அன்பும் பல பண்பாடுகளை மதிக்கவும் நேசிக்கவும் கற்றுக் கொடுத்தார். பிரான்சில் நோய்வாய் க்கு நீண்டகால மருத்துவம் பார்த்தும் பாபா சைமன் 1975 ஆகஸ்ட் 13 இறைவனடி சேர்ந்தார். இவரது உடல் டொகொம்பரேவில் அடக்கப்பட்டது. 

Add new comment

5 + 1 =