அவர் இருக்கின்ற கடவுள்

கடவுள் மோசேயை நோக்கி, “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே” என்றார். மேலும் அவர், “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்” என்றார்.

விடுதலைப் பயணம் 3-14.

ஆண்டவர் மோயிசனிடம் இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றார்.  ஆம். கடவுள் உருவாக்கப்படவில்லை. படைக்கப்படவில்லை. ஆதியிலே கடவுள் வார்த்தையாக இருந்தார். தண்ணீரின் மீது அசைவாடி கொண்டிருந்தார். அவருக்கு தோற்றமும் இல்லை முடிவும் இல்லை, அவர் என்றென்றும் இருப்பவர். மாறாதவர். மறையாதவர். அவரது நிலையிலிருந்து சிறிதும் மாறாதவர் .இருக்கின்றவராக இருக்கின்றவர் 

அவர் எரிகின்ற நெருப்பு, மின்னல், இடி,  என பலவற்றின் மூலமாக பேசுபவர். அவருக்கு உருவம். இல்லை. அவர் எங்கும் இருக்கிறார். எல்லா இடங்களிலும் இருக்கிறார். அவர் வாழுகின்ற இறைவன்.  அப்படிப்பட்ட இறைவன்,  தன் மகனை பலி கொடுத்து நம்மை பாவத்திலிருந்து மீட்கும் அளவுக்கு அன்பு கொண்டுள்ளார். என்னே அவரது அன்பு, எவ்வளவு பெரியது அவரது இரக்கம். 

அந்த இறைவனிடம் அடிக்கடி நாம் பேசினால் அவர் மகிழ்ச்சி அடைவார்.   

 

அன்பு ஆண்டவரே உம் அருள் ஒன்று எங்களுக்கு போதும் ஐயா.  உமக்கு முன் நிற்க நாங்கள் ஒன்றும் இல்லை. உம் மாட்சி மிகப் பெரிது . நீர் எங்களை நினைப்பதற்கு நாங்கள் யார்? .ஆண்டவரே மண்ணாகிய  எங்களை நீர் இம்மட்டும் அன்பு செய்வதற்காக நன்றி ஆண்டவரே.  நன்றி ஆமென்.

Add new comment

7 + 6 =