அருளாளர் விக்டௌரா ரசௌமனரிவொ - October 23, 2019

முதலாம் ரனவலலோன 1828 முதல் 1861 வரை அரசியல் இருந்த பொழுது, கிறிஸ்தவத்திற்கு பெரும் துன்ப நேரம். அவர் தனக்கு உண்டான ஒரு சிலை வழிபாடு, தனக்கு உண்டான பக்தி முயற்சிகளோடு, தன் பாதுகாப்பிற்காக அரசின் பாதுகாப்பிற்காக வழிபட்டுக்கொண்டிருந்தார். அரச குடும்பத்திற்கு அடுத்த மிகவும் சக்திவாய்ந்த குடும்பத்தில் இருந்து பிறந்தவர் தான் நம்முடைய நாயகி. பிரதான மந்திரி குடும்பத்திலே பிறந்து அந்த குடும்பத்திலேயே திருமணம் செய்யப்பட்டு முக்கிய பொறுப்பில் இருந்த நபர். இவருடைய தாத்தா முக்கிய மந்திரியாக இருந்தார் இவருடைய தாய்மாமனை இவர் மணந்துகொண்டார்.

1848 இல் பிறந்தார். இவருடைய பிறப்பு நேரம் தொழில் புரட்சி, மக்கள் வாழ்வாதார புரட்சி, நாட்டை மறுகட்டமைப்பு எழுச்சி, இவற்றால் நிறைந்த காலம். 1861 இல் அரசின் மரணத்திற்கு பின்பு தனனாரிவா தற்பொழுது அந்தனனாரிவா என்று அழைக்கப்படுகினற இடத்திற்கு கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் வந்தனர்.அப்பொழுது நம் நாயகிக்கு பதிமூன்று வயது. இவரே குளுன் தூய சூசையின் சகோதரிகளின் பள்ளியில் முதல் மாணவி.அவரின் நடத்தையாலும், பக்தியாலும், திருப்பலியில் பங்கேற்பது, இவற்றில்  அவரது தனித்துவம் குறித்து கட்டப்பட்டது.

1863 நவம்பர் ஒன்றிலேயே 15ஆவது வயதில் திருமுழுக்குப் பெற்றார். 1864 ஜனவரி 17 இல் முதல் திவ்ய நற்கருணை பெற்றார். அதே ஆண்டு மே 13ஆம் தேதி ரட்ரியாக இன்னும் தன்னுடைய உறவினருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இவர் முக்கிய மந்திரியின்  மூத்த மகன். நம் நாயகி துறவியாக வேண்டும் என்று விரும்பினார் ஆனால் காலம் அவரை வேறு நிலைக்கு கொண்டு சென்றது என்று பின்னாளில் அவரே சொல்லியிருக்கிறார்.திருமணம் ஆன பின்பும் தொடர்ந்து பள்ளிப் படிப்பை தொடர்ந்தார். ஏனென்றால் வீட்டையும் பிற வேலைகளையும் கவனிக்க நிறைய பணியாளர்கள் இருந்தார்கள். குடும்பம் எல்லோருமே சேர்ந்து புரோட்டஸ்டண்ட் ஆகவேண்டும் என்று இவரை வற்புறுத்தினர். ஏனென்றால் இதுவே உயர்குடியினர் பின்பற்றிய வழிபாட்டு முறையாகும்.

இவரோ கத்தோலிக்கம்  மீது ஆர்வம் கொண்டவர். தன் கணவரிடம் சொல்லி இது எனது உரிமைக்கு வேறுபட்டது என்பதை எடுத்துரைத்தார். பின்னர் இதை குறித்து பேசுவதை விட்டுவிட்டனர். இவர் தொடர்ந்து கிறிஸ்தவத்தை பின்பற்றி கொண்டிருந்தார். அவருடைய கணவரும் சிலநேரங்களில் இவரோடு மண்டியிட்டு ஜெபிப்பார். மகப்பேறு இல்லாததால் இவர் இன்னும் அதிகமாக சுமை சுமத்தப்பட்டார். வீட்டாரும் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டதாள் ஆலயத்திலேயே ஒரு நாளுக்கு ஏழு எட்டு மணி நேரங்களை செலவிட்டார். அன்னை மரியாவின் மீது சிறப்பு பக்தியை கொண்டிருந்தார். எப்பொழுதும் ஜெபமாலையை கையில்  அணிந்திருந்தார்.

முப்பதுபணியாளர்களைக் கொண்ட தன் வீட்டின் பொறுப்புகளையும் கவனித்துக் கொண்டார். நோயுற்றவரையும்  சென்று கவனித்தார். தாராளமாக உதவிகளை செய்தார். ஏழைகளை வீட்டிற்கு வரவேற்றார். இப்படி பல நல்ல காரியங்களை செய்து கொண்டு இருந்தார். 1876 இல் அருள்நிலை கண்ணியின் போது இயக்க சபையிலே தலைவரானார். துணிகளை தைத்து ஏழைகளுக்கு தொண்டர்களுக்கு கொடுக்கின்ற பணியை துவங்கினார். ஏழை திருச்சபைகளுக்கு உதவினார். ஆலயங்கள் கட்ட உதவினார். பிரதான மந்திரியின் குடும்பத்தவர் என்ற காரணத்தினால் இவரும் அரண்மனைக்குச் செல்ல வேண்டும்.

எப்பொழுதும் போல கையிலே ஜெப மாலை அணிந்து மதிய உணவிற்கு முன்னும் பின்பும் ஜெபம் செய்ய சென்று விடுவார். மணிகள் இசைக்கப்படுகின்றன நேரத்திலே மூவேளை செபம் சொல்ல தனியே சென்றுவிடுவார். காரணம் கேட்ட பொழுது இது கிறிஸ்தவர்களின் வழக்கம் என்று சொன்னாராம். இவரிடத்தில் இரட்டை  வாழ்வு நிலை இருந்ததே இல்லை. எப்பொழுதும் கடவுளுக்கு உண்மையாய் இருந்தார்.

பலரும் இவரை பார்த்து ஆச்சரியப்பட வைத்தது என்னவென்றால் உண்மை இல்லாத அவருடைய கணவரின் பொருட்டு இவர் அதிக பொறுமையாய் இருந்தது. கணவரின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதைப் பற்றி இவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ஆனால் இவரின் தாத்தா அரசு இடம் சொல்லி இவரையும் இவரது கணவரையும் விலக்கிவிட முடிவுசெய்தனர்.

ஆனால் இவர் சென்று இவருடைய மாமனாரிடம் கிறிஸ்தவ திருமணம் ஒருபோதும் முறிவு படாது, எனவே பிரிப்பதை  நிறுத்தி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம். அவ்வளவு நம்பிக்கை திருச்சபையின் படிப்பினைகள் மீது. 1883 மே 25 அன்று கத்தோலிக்க மறை  மீது மாபெரும் தாக்குதல் நடந்தது. ஆலயங்கள் மூடப்பட்டன பிரெஞ்சு மறைப்பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

ஞாயிறு அன்று ஆலயங்கள் மூடப்பட்டிருந்தன. நம்முடைய நாயகி சென்று பார்த்தபொழுது காவலர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தன.ர் இவர் உடனடியாக பிரதமமந்திரி மந்திரிக்கு தெரியப்படுத்தி என்னவென்று விசாரித்த பொழுது அப்படிப்பட்ட ஆணை ஏதும் பிறப்பிக்கப் படவில்லை என்று தெரியவந்தது. இவர் கதவைத் திறந்து மக்களை உள்ளே விடுமாறு கேட்டார் இல்லை என்றால் முதலில் சிந்துவது என் ரத்தம் ஆகவே இருக்கும் என்பதை சொல்லி எச்சரித்தார். ஆலயக் கதவுகள் திறக்கப்பட ஜெபங்கள் சொல்லப்பட்டன

பிரெஞ்சு  மடகாஸ்கர் போர் நடந்த நேரத்தில் பிரதேசத்து மறைப்பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். நம் நாயகிக்கு பிரான்சு மறைப் பணியாளர்கள் மீது எந்த சந்தேகமும் இல்லை. எனவே திருச்சபையின் தலைமைக்கு இவ்வாறு எழுதினாரா  பிரான்ஸ் மறை பணியாளர்களுக்கு பணியாளர்களுக்கு பதிலாக பிரிட்டிஷ் மறை பணியாளர்களை அனுப்பலாமே என்றாராம். யார் வந்தாலும் மறைபணி மீதான வெறுப்பு ஒன்றாகவே இருந்தது. ஒரு குருவானவர் கத்தோலிக்க  இணைப்பை ஏற்படுத்தி அதில் நம் நாயகியும் உறுப்பினர் ஆகிறார். அந்த அமைப்பு வழியாக இவர் மக்களை சந்தித்து நம்பிக்கையூட்டி, மூடப்பட்ட ஆலயங்களை திறந்து, பள்ளிகளை மறுசீரமைப்பு செய்கின்றார். இது அவ்வளவு எளிதான காரியமல்ல.

மக்களை சந்தித்த பொழுது 'நம்பிக்கையோடு இருங்கள், கத்தோலிக்க மார்க்கம் தடை செய்யப்பட்டது அல்ல, பிரான்ஸ் சென்றுவிட்டது மதம் நம்மோடு இருக்கின்றது' என்றாராம். இவ்வாறு சொல்லி மக்களை நல்வழிப்படுத்தினாராம். இவருடைய கடைசி பணி என்னவென்றால் இவருடைய திருமணம் சார்ந்தது. குடித்துவிட்டு இருந்த தன் கணவன் பிறரால் தூக்கி வரப்பட, 1887 இல் அவர் இறக்கும் தருவாயில் அவருக்கு நன்னெறி கற்பித்து திருமுழுக்கு பெற வைத்தார். பின்பு அவர் இறந்துவிட்டார்.

அவருடைய இறப்பிற்குப் பின் ஏழு ஆண்டுகள் கணவனுக்கு ஆகவே நாட்களை ஒப்படைத்தார். எளிய உடைகளை அணிந்து அரண்மனையில் இருந்து முற்றிலுமாக வெளியேறி விட்டார். இவரின் பிள்ளைகள் யார் என்றால், நோய்வாய்ப்பட்டு வரும் ஏழைகளும், கொடூரமாக சிறைபிடிக்கப்பட்ட கைதிகளும், நோயால் மிகவும் தாக்கப்பட்ட தொழு நோயாளர்களுமே. சிறிதாய் ஒரு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி 1894 ஆகஸ்டு 21 அன்று மரணம் எய்தினார்.

1895 வரை அவருடைய மரணத்திற்கு இரண்டு மாதங்களுக்குப் பின்பு  எல்லா மறை பணியாளர்களும் நாடு கடத்தப்பட்டனர். அவர் இறக்கின்ற பொழுது ஜெபமாலை அறிந்திருந்த கரங்களை உயர்த்தி 'அம்மா. அம்மா. அம்மா' என்று சொல்லி இறந்தார். 1989 ஏப்ரல் 30 பாப்பரசர் புனித இரண்டாம் ஜான்பால் இவரை அருளாளராக அறிவித்தார். திருச்சபை ஆகஸ்ட் 21-ஆம் நாளை இவரது நாளாக அனுசரிக்கின்றது.

Add new comment

1 + 6 =