News

Wednesday, January 23, 2019

ரஷ்யா-உக்ரைன் கடல் பகுதியில் இரண்டு கப்பல்கள் பயணித்தபோது தீ விபத்து ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

15 இந்திய மாலுமிகள் உட்பட பலர் அந்த கப்பலில் பயணித்தனர்.

 

தான்சானியாவை சேர்ந்த கேன்டி மற்றும் மேஸ்ட்ரோ ஆகிய இரண்டு கப்பல்கள், ரஷ்யா-உக்ரைன் கடல் பகுதியில் கெர்ச் ஜலசந்தியில் சென்றுகொண்டிருந்தன.

 

ஒரு கப்பல் சமையல் எரிவாயுவையும் மற்றொரு கப்பல் எண்ணெய்யையும் ஏற்றிச்சென்றன.

 

எரிபொருளை மாற்றியபோது தீ பற்றியதால், அந்தக் கப்பலில் இருந்த பொருட்கள் வெடித்து சிதறின.

 

Wednesday, January 23, 2019

இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.

 

இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியிலுளள சும்பாவா தீவுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை ரிகடர் அளவுகோலில் 6.1ஆக பதிவான நிலநடுக்கம் நிகழந்தது.

 

இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுமில்லை

 

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவலக்ளும் இதுவரை வெளிவரவில்லை.

 

Wednesday, January 23, 2019

2021ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸை மீண்டும் அழைக்க பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க திருச்சபை தலைவர்கள் திட்டமிட்டு்ளளனர்.

 

பிலிப்பீன்ஸில் கிறிஸ்தவம் பரவி 500வது ஆண்டை முன்னிட்டு திருத்தந்தையை அழைக்க இந்நாட்டு ஆயர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

 

ஆயர்கள் பேரவையின் இந்த வார அமர்வின்போது, ஆயர்களின் அழைப்பிதழை அனுப்புவது பற்றி விவாதிக்கப்படும் என்று ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் அருட்தந்தை மார்வின் மிஜியா கூறியுள்ளார்.

 

Wednesday, January 23, 2019

திருமண உரிமம் பெற வேண்டுமானால், திருமணம் செய்கின்ற ஜோடிகள் ஹெச்ஐவி பரிசோதனை செய்ய வேண்டுமென்ற விதிமுறையை இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவின் அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

 

அதிகரித்து வரும் ஹெச்ஐவி தொற்றுடையோரை தடுக்கும் வகையில், 2017ம் ஆண்டு இந்த விதிமுறை உருவாக்கப்பட்டது.

 

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்த விதிமுறை கட்டாயமாகியுள்ளது.

 

Wednesday, January 23, 2019

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்கின்ற அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயக் கட்சி சார்பாகப் போட்டியிட உள்ளதாக தெரியவந்துள்ளது.

 

2020-ம் ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

 

ஜனநாயகக் கட்சியின் சார்பில் தற்போதைய ட்ரம்பின் அரசை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் கமலா ஹாரீஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

Wednesday, January 23, 2019

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தொடங்கி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

 

21 மாத சம்பள நிலுவை தொகையினை வழங்க வேண்டும், சத்துணவு- அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் போன்ற 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

 

Wednesday, January 23, 2019

இந்தியாவிலுள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த 2018-ம் ஆண்டு 39 சதவீதம் அதிகரித்துள்ளது,

 

இந்த கோடீஸ்வரர்க வெறும் ஒரு சதவீதமே.

 

ஆனால், கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கி நாட்டின் 10 சதவீத மக்கள் வறுமையில் வாழ்வதாக ஆக்ஸ்ஃபாம் அறிக்கை தெரிவிக்கிறது. .

 

இந்தியாவில் கோடீஸ்வரர்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகள் குறித்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆண்டுதோறும் நாட்டில் பணக்காரர்கள், ஏழைகளுக்கு இடையிலான இடைவெளி, சமூகத்தில் அதிகரித்து வருவது ஆரோக்கியமானதல்ல என்றும் இந்த அறிக்கை எச்சரித்திருக்கிறது.

Wednesday, January 23, 2019

கம்யூனிச நாடான சீனாவுக்கு ஏற்றதாக மதத்தை உருவாக்க சீன கத்தோலிக்க நாட்டுப்பற்றாளர் கூட்டமைப்போடு இணைந்து பணிசெய்ய உறுதி ஏற்றிருப்பதாக சீன அரசு அங்கீகரித்துள்ள ஆயர்கள் பேரவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

வேலைவாய்ப்பு துறையின் ஐக்கிய முன்னணியின் துணை அமைச்சர் வாங் சுவோயன், சீன கத்தோலிக்க நாட்டுப்பற்றாளர் கூட்டமைப்பு மற்றும் தலைநகரான பெய்ஜிங்கிலுள்ள சீனாவின் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் பேரவையை சந்தித்த பின்னர், கும்மிங் மறைமாவட்ட ஆயர் ஜோசப் மா யாங்லின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Tuesday, January 22, 2019

மிண்டனாவோ-வில் இருக்கின்ற தற்போதைய முஸ்லிம் பிரதேசத்தை விரிவாக்குவதற்கு உருவாக்கும் சட்டத்தை அனுமதிப்பது தொடர்பாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

 

புதிய அரசியல் அமைப்பை மிண்டனாவோ-வில் அமைப்பது என்பது 2014ம் ஆண்டு பிலிப்பீன்ஸ் அரசு மோரோ கிளர்ச்சியாளர்களோடு ஏற்படுத்திய அமைதி உடன்படிக்கையாகும்.

 

இரண்டரை மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்கள் என்று தேர்தல் ஆணையம் முன்னர் அறிவித்திருந்தது.

 

Tuesday, January 22, 2019

உலகில் அதிக வயதான மனிதராக நம்பப்படும் மசாசோ நொனாகா, அவரது 113-வது வயதில் ஜப்பானில் காலமானார்.

 

1905-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்த மசாசோ நொனாகா, 113-வது வயதில் ஜன. 20-ம் தேதி வயது மூப்பு காரணமாக அவரது இல்லத்தில் காலமானார்.

 

இதற்கு முன்னதாக ஸ்பெயினைச் சேர்ந்த ஃப்ரான்சிச்கோ ஒலிவெரா கடந்த ஆண்டு இறந்த பிறகு, உலகின் மூத்த மனிதராக நொனாகாவை கின்னஸ் அறிவித்தது.

 

1931-ல் திருமணம் செய்து கொண்ட நொனாகாவுக்கு, 5 மகன்கள் பிறந்தனர்.

 

உலகிலேயே நீண்ட காலம் வாழும் நபர்கள் ஜப்பானில் அதிகமாக உள்ளனர்.

 

Please wait while the page is loading