விண்ணிலிருந்து வந்த விண்மீனே!

சந்திரனை போன்ற முகம்
சூரியனை போன்ற உடை
பன்னிரு விண்மீன் கிரீடம்
பாவை அழகோ அழகு

கனிவு நிறைந்த கண்கள்
கரைபுரண்டு ஒடும் அன்பு
கலங்கமில்லா கன்னிமை
கற்பனைக்கெட்டா காவியம்

அதிதூதர் கபிரியேல்
அருள் நிறைந்த மரியே 
ஆண்டவன் உன்னுடனே என்று
அகமகிழ்ந்து வாழ்த்து கூறி

ஆவியின் அருள் வரத்தாலே
ஆண்டவர்  இயேசுவை பெறுவீர் என
ஆகட்டும் என்றொரு வார்த்தையால்
அகிலத்தை ஆள்பவனை பெற்றார்

தாழ்ச்சியான குணம் கொண்டு
தாரகை அவரும் சென்றார்
உறவினர் எலிசபெத்தை பார்க்க
உளம் நிறைந்த மகிழ்ச்சியோடு

ஓருசில மாதம் அங்கு தங்கி
ஒரு குறையின்றி உதவி செய்து
ஓர் உதாரணமாக நின்றார்
ஓங்கிய பண்புடனே மரியாள்.

வானத்து விண்மீன் உதிக்க
வானவர் துதிகள் பாட
மாபரன் இயேசு ராஜன்
மரியின் மகவாய் பிறந்தார்

மாமரியின் பரிந்துரையோடு
மாபரன் இயேசுவின் வல்லமையோடு
ஆவியானவரின் ஆற்றலோடு
அப்பா பிதாவில் அகமகிழ்வோம்  

அனைவர்க்கும் இனிய கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்  

Add new comment

4 + 4 =

Please wait while the page is loading