யார் பெரியவர்

Prayer at dawn

ஆண்டவரே! உமக்கு நிகர் யாருமிலர்; நீர் பெரியவர்; உமது பெயர் ஆற்றல் மிக்கது.

 

எரேமியா   10:6

 

ஆண்டவர் மிக பெரியவர்.  சர்வ வல்லவர். எல்லா படைப்புகளும் அவர்க்கு அடி பணியும். அவர் குரலுக்கு கீழ் படியும். 

 

வானம் அவரது சிங்காசனம். பூமி அவரது பாத படிகள். அவரது குரல் இடிமுழக்கம் போன்றது. அவரது அன்பின் பரிசம் தென்றலை போன்றது .  அவரது அன்பு தாய் மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் என்று கூறும் அளவு  உயர்ந்த அன்பு.  முகத்தின் ஒளி   கதிரவனை போல ஒளிமிக்கது. 

 

 கடலலையை பார்த்து இரையாதே என அவர் சொன்னால் அப்படியே நின்று விடும்.   அசுத்த ஆவியை பார்த்து நீ அவனை  விட்டு விலகி கடலில்  போய் விழு என்றால் அப்படியே கடலில்விழுந்து விடும். அந்த அளவுக்கு கட்டளை இடும்  நாவன்மை .

 

அவரது குரல் அவ்வளவு ஆற்றல் உள்ளது. அவ்வளவு பெரிய கடவுள் நம்மோடு இருக்கிறார். அவருக்கு மேலானவர் இந்த உலகில் யாருமில்லை.  ஈடு இணையில்லாத  கடவுள். நேற்றும்  இன்றும் என்றும் மாறாத இறைவன்  

 

அப்படிப்பட்ட  கடவுள் நம்மோடு இருக்கும் போது நாம்  பயப்பட தேவையில்லை. அவர் எல்லாம் பார்த்து கொள்வார்.

 

ஜெபம் ;:. நேற்றும் இன்றும் என்றும் மாறாத கடவுளே உம்மை துதிக்கிறோம் . துதிகளின் நடுவில் வாழ்பவர் உம்மை ஆராதிக்கிறோம் . தாயை  போல எங்களை தேற்றி, தந்தை போல எங்களை நல்வழி நடத்தியருளும். இன்று முழுதும் எங்கள் ஆயுளின் ஒவ்வொரு நாளும் எங்களோடு இரும்.  உமது பிள்ளைகளாக வாழ அருள் தாரும் .ஆமென்.

Add new comment

9 + 4 =

Please wait while the page is loading