யார் சொந்தம்?

Prayer at dawn

அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.

 

இணைச் சட்டம் 26.19

 

ஆண்டவர் அவருடைய முறைமைகளையும் நியமங்களையும்  நிறைவேற்றுமாறு நமக்கு  கட்டளையிட்டுள்ளார். நம் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிருக்க வேண்டும்

 

ஆண்டவரை மட்டுமே  கடவுளாய் ஏற்று  அவருடைய வழிகளில் நடந்து அவருடைய நியமங்களையும், கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடித்து அவர் குரலுக்குச் செவி கொடுத்தால் நாம்  அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்போம்.

 

பூமியின் அனைத்து மக்களிலும் நம்மை கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைப்பார். அவருடைய பிள்ளைகளாக எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்போம்.

 

ஜெபம் :. ஆண்டவரே எளிய பாவி என்னை ஒரு பொருட்டாக மதிப்பதற்கு நான் தகுதியற்ற போதிலும் என்னையும் உமது பிள்ளையாக ஏற்று கொண்டு ,பூமியின் அனைத்து மக்கள் இனங்களிலும்  புகழ்சியும் கீர்த்தியுமாக வைப்பவரே உமக்கு நன்றி.ஆண்டவரே  எங்களோடு தங்கும். ஆமென்.

Add new comment

9 + 4 =

Please wait while the page is loading