யார் அந்த மேய்ப்பன்?

நல்ல ஆயன்
நலம் தரும் மேய்ப்பன்
தன் நலம் கருதாது எனக்காய்
தன்னுயிர் தந்தவர்

கல்லு முள்ளு களனியெல்லம்
காடு மேடு மலைகள் எல்லாம்
தொலைந்து போன என்னை
தொடர்ந்து வந்து தோளில் சுமப்பவர்

தளர்ந்து போன என்னை
தாவி அணைத்து 
தவிக்காதே ! தந்தை
நானிருக்கிறேன் என்பவர்

இருளும் பள்ளத்தாக்கும்
இனி என்னை தாக்காது
இரவும் பகல் போல் இருக்கும்
இமைக்காது காத்திடுவார்.

புல்லுள்ள இடங்களுக்கும்
பொய்கை தண்ணீருக்கும்
பொல்லாப்பின்றி நடத்திடுவார்
பொறுமையாக சென்றிடுவேன்.

அவர் கோலும் கைத்தடியும்
ஆயத்தமாய் எனக்கிருக்கும்
ஆபத்து காலத்திலே
அனுகூலமாய் எனக்குதவும்.

எதிரியின் கண்முன்னே
என்னை உயர்த்திடுவார்
என் தலையை அபிசேகித்து
என் கிண்ணம் நிரம்ப செய்வார்.

நல்ல ஆயன் ஆண்டவருக்கு
நலம் தரும் தந்தைக்கு
நன்றி கீதம் பாடிடுவேன்
நாளெல்லாம் மகிழ்ந்திடுவேன்

நன்றி கீதம் படிடுவேன்
நாளெல்லாம் மகிழ்ந்திடுவேன்.
  

Add new comment

3 + 2 =

Please wait while the page is loading