நாட்டுக்காக! இதையுமா செய்வது?

Prayer at dawn

ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.

யாக்கோபு 5-16

நாம் ஒருவர் மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என கடவுள் கூறுகிறார். சோதோம் கொமோராவில் பாவம் பெருகியது. ஆண்டவர் அதை அழிக்க நினைக்கிறார் 

ஆபிரகாம் தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. என்று அந்த மக்களுக்காக கடவுளிடம் வேண்டுகிறார்.

எஸ்தர் மூன்று நாட்கள் இரவும் பகலும் முழங்காற்படியிட்டு  ஆண்டவரை வேண்டி  அத்தனை யூதரையும் அழிவிலிருந்து தப்புவித்தாள். 

நாமும் ஒருவர் ஒருவருக்காக  ஜெபிக்க வேண்டும். நம் நாட்டுக்காக ஜெபிப்போம்.  நாட்டிலுள்ள எல்லா மக்களும் அமைதியான வாழ்வு வாழ ஜெபிப்போம். நம் நாட்டின் முன்னேற்றத்துக்காக ஜெபிப்போம். உலக நாடுகளில் பரவி கொள்ளை நோய் முற்றிலும் அழிந்து போய் மக்கள் அனைவரும் மகிழ்வூடு வாழ ஜெபிப்போம்.  நம் பிள்ளைகள், பெற்றோர், உறவுகள், அனாதைகள், கைவிடப்பட் டோர் அனைவருக்காகவும் ஜெபிப்போம்.

ஜெபம் : ஆண்டவரே எங்களை முற்றிலுமாக உம்மிடம் ஒப்படைக்கிரோம். எங்கள் நாட்டை ஆசீர்வதியும். அனாதைகள் கைவிடப்பட்டவர்களுக்கு அன்பு கிடைக்க செய்யும். எங்கள், உறவுகளை ஆசீர்வதியும்.  எங்களை பயமுறுத்தும் அந்த வைரஸை முற்றிலும் அழித்து உலகில் எல்லோரும் பயமின்றி வாழ வழி செய்யும். எங்களையும் எங்கள் பெற்றோரையும் , பிள்ளைகளையும் ஆசீர்வதித்து சமாதானத்தோடு வாழ செய்யும் .ஆமென்.

Add new comment

1 + 1 =

Please wait while the page is loading