தொடக்கமும் முடிவும் யாராக இருக்கும்? தெரிஞ்சுப்போமா?

நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார். 

நீதிமொழிகள்  3:6

நாம் எந்த காரியத்தை செய்தாலும் ஆண்டவரை முன் நிறுத்தி தொடங்க வேண்டும். அவரில்லாத எந்த ஒன்றிலும்  ஈடுபடக்கூடாது.  நாம் அவரை தேடி அவர் முன்னிலையில் தொடங்கினால்  அவர் அந்த காரியத்தின் முதலிருந்து முடிவு வரை நம்மோடு இருப்பார். எல்லா நேரங்களிலும் நம்மோடு இருப்பார். 

நோவா எல்லாவற்றையுமே கடவுள் முன்னிலையில் செய்தார்.  கடவுள் அவரை பெரு வெள்ளம் வந்த போது காத்தார்.  பெட்டகம் செய்வதிலிருந்து ,அந்த பெட்டகத்தை விட்டு வெளியே வந்து நன்றி பலி செலுத்துவது வரை கடவுள் அவரோடு  இருந்தார்.

மோயிசன் ஒவ்வொரு நேரமும் ஆண்டவரிடம் சென்று பேசிய பிறகு தான் எதையும் செய்வார்.  ஆதால் தான் அவரால் அந்த பாலை நிலத்தில் அந்த மக்களை ஒரு குறைவும் இல்லாமல் நடத்தி செல்ல முடிந்தது. எரியும் புதரில் மோயிசனோடு பேசிய நாளிலிருந்து சீனாய் மலையில் அவர் இறந்தது வரை ஒவ்வொரு நிகழ்விலும் கடவுள் அவரோடு இருந்தார்.
.
ஜெபம்:. ஆண்டவரே உமக்கு நன்றி.  உம்மை முன் நிறுத்தி நாங்கள் எல்லா காரியங்களையும் முன் எடுக்கிறோம்.  உமக்கு சித்தமானவற்றை எங்களுக்கு வாய்க்க பண்ணும். எங்கள் பாதைகளை செம்மையாக்கும். நாள் முழுவதும் எங்களோடு இருந்தருளும். ஆமென்.

Add new comment

4 + 3 =

Please wait while the page is loading