சோதிக்கும் மனஉறுதி

Prayer at dawn

என் சகோதர சகோதரிகளே, பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டிருங்கள்.

உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும்.

யாக்கோபு 1:  2,3

 

 

 

ஆபிரகாம் தன் மகனை பலியிட சொல்லி ஆண்டவர் கேட்ட போது அவர்  மனம் சிறிதும் பதட்டபடவில்லை. மன உறுதியோடு இருந்தார். எனவேதான்  ஆபிரகாம் ஒரு பெரிய இனத்திற்கே தந்தையானார்.

 

அன்னை மரியாள் தன் மகனை சிலுவை சாவுக்கு ஒப்பு கொடுக்கும் போது அந்த நிகழ்ச்சியை மன உறுதியோடு எதிர் கொண்டார். ஆகவேதான்  அன்னை மரியாள் மனுகுலத்திற்கே தாய் ஆனார்.

 

நமக்கு சோதனை வரும்போது நம் மனவுறுதி, நிறைவான செயல்களால் விளங்க வேண்டும் அப்பொழுது தான்  எக்குறையுமின்றி முற்றும் நிறைவுள்ளவர்களாய் நாம் இருப்போம். ஆண்டவர் இப்படி செய்து விட்டாரே என்று கடவுளை சந்தேகிக்க கூடாது. நம்ப வேண்டும்

 

நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் ஜெபிக்க வேண்டும்.  ஆண்டவரின் குரலை  கேட்க வேண்டும்.  நிதானமாக அவரது திட்டம் என்ன என்று அறிய வேண்டும் . ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள்.  அங்கும் இங்குமாக பதட்டத்தோடு காணப்படுவார்கள். . 

 

ஒரு தாய் தோளில் இருக்கும் குழந்தை அம்மா தன்னை பாதுகாப்பார் என   சந்தோசமாக இருப்பது  போல , ஆண்டவருடைய கரங்களில் இருக்கும் நம்மை அவர் கை தவற விடமாட்டார் என நம்ப வேண்டும்.  எப்பொழுதும் ஆண்டவரில் மகிழ்ச்சியாய் இருப்போம்.

 

ஜெபம் :. தாய் போல அன்பு செய்து, தந்தை போல அறிவு புகட்டி, எங்களை நாள்தோறும் தோளில் சுமக்கும் யேசுவே உம்மை போற்றுகிறோம். உம் கரங்கள் எங்களை தவற விடாது என்பதை உணர்ந்தவர்களாக , எங்கள் கவலை , கண்ணீர், நோய்,  தோல்விகள்,  அனைத்திலும் நீர் எங்களோடு இருக்கிறீர் என்பதை உணர்ந்தவர்களாக , எங்கள் கவலை , கண்ணீர், நோய்,  தோல்விகள்,  அனைத்திலும் நீர் எங்களோடு இருக்கிறீர் என்பதை உணர்ந்து நம்ம்பிக்கையோடு வாழ வரம் தாரும்.  ஆமென்.

Add new comment

7 + 13 =

Please wait while the page is loading