சொன்னதை செய்ததால் நடந்த புதுமை

Prayer at dawn

என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். “ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்” என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

 

எசேக்கியேல். 37.14

 

.ஆண்டவர் இறைவாக்கினர் எசேக்கியேல் கிட்ட செத்து போனவர்களுடைய எலும்புகளுக்கு இறைவாக்கு சொல்ல சொல்கிறார். 

அப்போது இறைவாக்கினர் அந்த எலும்புகளை பார்த்து தலைவராகிய ஆண்டவர்  கூறுகிறார்: .

நான் உங்களை நரம்புகளால் தொடுப்பேன்; உங்கள்மேல் சதையைப் பரப்புவேன். உங்களைத் தோலால் மூடுவேன். பின் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர்பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள் என்று  சொல்கிறார்

 

ஆண்டவர் கட்டளையிடப்பட்டபடி அவர் இறைவாக்குரைக்கும் போது உராயும் ஓசை கேட்டது. ஒவ்வொரு எலும்பும் தனக்குரிய எலும்புகளுடன் சேர்ந்து கொண்டது. அவற்றில் நரம்புகள் ஏற்பட்டு, சதை தோன்றித் தோல் அவற்றின்மேல் மூடியது. ஆனால் அவற்றில் உயிர் இன்னும் வரவில்லை.

பின்னர் அவர்களுக்குள் உயிர்மூச்சு புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று, காலூன்றி, மாபெரும் படைத்திரள்போல் நின்றனர்.

 

லாசர் இறந்து மூன்று நாட்களாக பிறகு ஆண்டவர் அங்கே சென்று அழுகிய உடம்பை உயிர் பெற செய்கிறார். 

 

வெறும் எலும்புகளை ஒன்று சேர்த்து மனிதனை எழுப்பிய கடவுள், அழுகி நாற்றம் எடுத்த உடலை உயிற்பெற செய்த கடவுள் , இன்று நம் உடம்புகளில் உள்ள நோய்களை மாற்றி உலர்ந்து போன நம் எலும்புகளை வலிமை பெற செய்கிறார். இறந்து போன செல்களை உயிர் பெற செய்கிறார். புழுத்து நாற்றமெடுக்கும் குடல்களில் புத்துயிர் தருகிறார். அடைப்புகள் எல்லாவற்றையும் மாற்றி இருதயத்தை செயல்பட  செய்கிறார் உறுதியற்ற ,, தொய்ந்து போயிருக்கும் ஆன்மாவுக்கு மிக பெரிய சமாதானம் தருகிறார். நாம் கவலை பட வேண்டாம். நம் கடவுளால் எல்லாம் கூடும்.

 

ஜெபம் : ஆண்டவரே, எங்களில் பலர் பலவித நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோய், இருதய பலஹீனம், தீராத வயிற்று , எலும்பு தேய்மானம், காய்ச்சல், போன்ற பல  நோய்களிருந்து விடுதலையை தாரும். கொரான வைரசிடமிருந்து மக்களை பாதுகாதருளும்.அந்நோய் தாக்கப்பட்ட எல்லா மக்களையும் நலமடைய செய்தருளும்.இந்த நிமிடமே எல்லோரும் சுகம் பெற்று புத்துணர்வோடு வாழ்ந்து நீரே  கடவுள்.  நீரே அற்புதங்களை செய்பவர் என்பதை உலகம் அறிய செய்யதருளும்.   ஆமென்.

Add new comment

13 + 7 =

Please wait while the page is loading