சும்மா இருப்பாரா அப்பா?!

Prayer at dawn

என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்; உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்; இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா?

திருப்பாடல்கள் 56.8

தாவீது அரசனுடைய வாழ்க்கையெல்லாம் துன்பங்களும், கண்ணீரும் நிறைந்ததாகவே இருந்தது . அதிகமாய் அழுத  தாவீது ராஜா,  கடவுளே, எனக்கு இரங்கியருளும்; ஏனெனில், மனிதர் என்னை நசுக்குகின்றனர்; அவர்கள் என்னுடன் நாள்தோறும் சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர்.என் பகைவர் நாள்தோறும் கொடுமைப்படுத்துகின்றனர்; மிகப் பலர் என்னை ஆணவத்துடன் எதிர்த்துப் போரிடுகிரார்கள், எனக்கு பயம் வரும்போது உம்மையே நான் நம்புகிறேன் என்று சொல்லி  அழும்போது உருவான திருப்பாடல் வார்த்தைகள் இது .பின் நாட்களில் தாவீது அரசனுடைய கண்ணீர் மாறியது.  அவருடைய வாழ்வு கடவுளுக்குள் மகிழ்ச்சியாக மாறியது

ஆம் சகோதரமே, நம்முடைய

கண்ணீரின் ஜெபம் தூபம் போல் ஆண்டவர்கிட்ட போய் சேரும். வீணாய் திரும்பாது.   அது  திரும்பி வரும் போது மிகுந்த ஆறுதலும், சமாதானமும் நம்முடைய உள்ளத்தை நிரப்பும். 

கவலையும், கண்ணீரும் நிறைந்த இந்த உலகில் ஆண்டவர் நோயாளிகளையும், குஷ்டரோகிகளையும், பார்வையற்றவர்க ளையும், உடல் ஊனமுற்றவர்களையும் பார்த்து இரக்கப்பட்டார்.  அற்புதங்களைச் செய்தார். அவர்களுக்கு விடுதலை கொடுத்தார்.

அப்படிப்பட்ட கடவுள் நம் கண்ணீரை பார்த்து சும்மா இருப்பாரா? .நிச்சயமாக நம் அழுகையின் நாட்களுக்கு முடிவு வரும்.  நிறைவான சந்தோசமும் சமாதானமும் நமக்கு தருவார்.

ஜெபம் :. ஆண்டவரே . எங்களுக்கு நிறைவான சமாதானத்தை தாரும். எனக்கென யாருமில்லை யே என அழும் அனைவரின் அழுகையும் மகிழ்ச்சியாக மாற செய்யும். ஆண்டவரே கொரானோ வைரஸை நீரே அழித்து உலகில் எல்லா மக்களும் பயமின்றி சந்தோசமாக வாழ அருள் புரியும். பாதிக்கபட்ட அனைவரையும் குணமாக்கி அருளும். ஆமென்.

Add new comment

8 + 4 =

Please wait while the page is loading