கட்டளை இதுவே

Prayer at dawn

நான் அவர்களுக்குக் கொடுத்த கட்டளை இதுவே; என் குரலுக்குச் செவி கொடுங்கள்; அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்.

 

எரேமியா. 7:23.

 

ஆண்டவருடைய குரலுக்கு செவி கொடுப்போம்.  அவர் விவிலிய வார்த்தைகள் ,  திருப்பலி , திருவருட்சாதனகள், திரு அவை மேய்ப்பர்கள் மூலமாக ஒவ்வொரு நாளும் நம்மோடு பேசுகிறார்.  நாம் ஒரு செயலை செய்யும் போது நம்மை நல்லது செய்ய தூண்டுவது நமக்குள் இருக்கும் தூய ஆவிதான்.

 

அவர் குரலுக்கு நாம் கீழ்பணிந்து அதன் படி நடந்தால் நமக்கு நல்லதே நடக்கும். அப்படி நடக்கும் நடந்தால் தூய ஆவி நம்மை வழி நடத்துவார். 

 

பாவத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நாம் பெறவில்லை. மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டுள்ளோம். எனவே நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம்.

 

நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார்.

 

ஜெபம் :ஆண்டவரே, உம் தூய ஆவியை எங்கள் மீது பொழிந்தருளும்  நாங்கள் உம் கட்டளைகளுக்கு கீழ்படிந்து உம் பிள்ளைகளாக வாழ வரம் தாரும் . பகை உள்ள இடத்தில் சமாதானத்தையும், தேவையுள்ள இடங்களில் எங்கள் சேவைகளையும்,     வெறுமையுள்ள உள்ளங்களில் அன்பையும் விதைக்க அருள் புரியும். இவற்றின் மூலம் உம்மை நாங்கள் பிரதிபலிக்க அருள் தாரும்.ஆமென்.

Add new comment

4 + 7 =

Please wait while the page is loading