கடவுள் ஏன் வெளியேற்றினார்?

Prayer at dawn

லோத் காலந்தாழ்த்தினார். ஆண்டவர் அவர் மீது இரக்கம் வைத்திருந்ததால், அந்த மனிதர்கள் அவரது கையையும், அவர் மனைவியின் கையையும், அவர் இரு புதல்வியர் கையையும் பிடித்துக் கொண்டுபோய் நகருக்கு வெளியே விட்டார்கள்.

 

தொடக்க நூல் :19.16

 

சோதோம் கோமரா மக்கள்  பெரும் பாவம் செய்கிறார்கள். கடவுள் அந்நகரை அழிக்க தீர்மானம் பண்ணுகிறார்.  எனவே  கடவுளுடைய மனிதர்களை லோத்துடைய வீட்டுக்கு அனுப்புகிறார். 

 

அந்த தேவ மனிதர்கள் லோத்தை விரைவில் நகரை விட்டு வெளியேற சொல்கிறார்கள். லோத்தோ காலம் தாழ்த்துகிரார்.  ஆண்டவர் அவர் மீது இரக்கம் வைத்திருந்ததால் அந்த மனிதர்கள் அவரது கையையும், அவர் மனைவியின் கையையும், அவர் இரு புதல்வியர் கையையும் பிடித்துக் கொண்டுபோய் நகருக்கு வெளியே விட்டார்கள். 

 

ஆண்டவர் தான் அன்பு வைத்தவர்கள் மீது  இரக்கம் பாராட்டுவார். அவர்களை ஒரு நாளும் அழிக்க மாட்டார். அவர்களோடு அவரது உறவுகளையும் காப்பார். நாம் தப்புவதற்கு வழியும் காட்டுவார். அதற்கு அவருக்கு நாம் உண்மையாக நாம் நடக்க வேண்டும்.

 

ஜெபம் :. அன்பு ஆண்டவரே உம்மை துதிக்கிறோம். ஆண்டவரே எங்கள் மீது இரக்கம் பாராட்டும். உம் இரக்கத்தினால் நாங்களும் எங்கள் உறவுகளும் , நண்பர்களும், எங்களை சுற்றி இருப்போரும் அழிவுகளிலிருந்து காக்கப்பட அருள் தாரும். ஆமென்.

Add new comment

9 + 5 =

Please wait while the page is loading