ஒரே மகிழ்ச்சி

Prayer at dawn

நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்.

 

பிலிப்பியர் : 2.2

 

ஆண்டவர் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் . ஒரு மனத்தோடு செயல்பட வேண்டும் . அது என் மகிழ்ச்சியின் நிறைவு என்கிறார்

 

நம் குடும்ப வாழ்வில் நாம் வீண் பெருமைக்கு இடம் தர கூடாது. மனத் தாழ்மையோடு ஒருவர் மற்றவரை உயர்ந்தவராகக் கருதவேண்டும். நிறை குறைகளோடு பிறரை ஏற்று கொள்ள வேண்டும். 

 

அனைத்து உறவுகளும் கடவுள் நமக்கு கொடுத்தது. நாம் நம்மை சார்ந்தவற்றில் அல்ல, கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதரர் என பிறரை சார்ந்தவற்றிலே அக்கறை கொள்ள வேண்டும்.   கிறிஸ்து இயேசு இந்த  மனநிலையையே கொண்டிருந்தார். இயேசு,  அவர் இறைமகன் என்ற போதிலும் தன் தாய்க்கும் வளர்ப்பு தந்தைக்கும் பணிந்து நடந்தார். 

 

 நாம் அச்சத்தோடும் நடுக்கத்தோடும் நமது மீட்புக்காக பாடுபட வேண்டும்.. சமாதானத் தோடு வாழ வேண்டும்.முணுமுணுக்காமலும், வாதாடாமலும் யாவற்றையும் செய்யவேண்டும்.   கூடி ஜெபிக்க வேண்டும்.  பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒருவர் மற்றவருக்கு ஆறுதலாய் , ஆதரவாய் இருக்க வேண்டும்.

 

ஜெபம் :. ஆண்டவரே எங்கள் குடும்ப வாழ்வில் நாங்கள் பிறரை அவர்கள் இருக்கின்ற நிலையிலேயே ஏற்றுக் கொள்ள வரம் தாரும்.   எல்லோரையும் அன்பு செய்து,  அரவணைத்து

ஒற்றுமையுடன் . .  உமக்கு நிறைவான மகிழ்ச்சி தரும் பிள்ளைகளாக வாழ  தூய ஆவியின் பிரசன்னத்தை தாரும். ஆமென்.

Add new comment

3 + 11 =

Please wait while the page is loading