'உதவி' இது கட்டளை

Prayer at dawn

தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.

 

யாக்கோபு 1-27

 

தந்தையாம் கடவுளின் விருப்பம்  என்னவென்றால் திருசட்டங்களை பின்பற்றி நல்ல சமய வாழ்வு வாழ்வது மட்டும் அல்ல.  அனாதைகளையும், கைம்பெண்களையும் அன்பு செய்து அவர்களுக்கு உதவி செய்வது, .

எனக்கென யாரும் இல்லையே என்று ஏங்குபவர்களை ஆதரித்து அவர்களுக்கு அன்பு பணி செய்வது போன்றவையாகும் 

 

நாம் ஆள்பார்த்துச் செயல்பட்டால் நாம் செய்வது பாவம்; .நாம் ஏழை பணக்காரன் என் வேறுபாடு பார்ப்பதை கடவுள் விரும்பவில்லை.

 

எனவே மனிதர் நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர் எனத் தெரிகிறது.

 

இராகாபு என்ற விலைமகள் தூதர்களை வரவேற்று வேறு வழியாக அனுப்பியபோது, செயல்களால் அல்லவா கடவுளுக்கு ஏற்புடையவரானார்!  பெறுவதில் இல்லை. எப்போதுமே கொடுப்பதில் தான் இன்பம் 

 

நாம் ஒவ்வொருவரும் உலக பாவங்களுக்கு அகப்படாமல் தூய வாழ்வு வாழ வேண்டும்.

 

ஜெபம் :. ஆண்டவரே நாங்கள் பிறருக்கு உதவுதல் மூலம் மகி ழ் ச்சி  அடையவும், எங்கள் நல்ல செயல்கள் மூலம் தந்தையாம் உமக்கு  விருப்பமானவர்களாக வாழ வரம் தாரும். ஆமென்.

Add new comment

8 + 11 =

Please wait while the page is loading